»   »  'தல' பட ரிலீஸுக்காக இன்று விடுமுறை அறிவித்த ஐடி கம்பெனி

'தல' பட ரிலீஸுக்காக இன்று விடுமுறை அறிவித்த ஐடி கம்பெனி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: வீரம் படத்தின் ரீமேக்கான கட்டமராயுடு ரிலீஸையொட்டி ஆந்திராவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த வீரம் படத்தை பவன் கல்யாணை வைத்து கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். படத்தை கிஷோர் குமார் இயக்கியுள்ளார்.

IT company declares holiday fo Thala movie release

பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ளார். படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் கட்டமராயுடு ரிலீஸையொட்டி ஆந்திராவில் உள்ள ஐடி நிறுவனமான ஆட்டம் சாப்ட்வேர் சொலுஷன்ஸ் இன்று விடுமுறை அறிவித்துள்ளது.

IT company declares holiday fo Thala movie release

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

பவன் கல்யாணின் கட்டமராயுடு ரிலீஸையொட்டி மார்ச் 24ம் தேதி சிறப்பு விடுமுறை அளிப்பது என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக வரும் 26ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை அனைவரும் வேலைக்கு வர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
An IT company in Andhra has declared special holiday today so that its employees can watch Pawan Kalyan's Katamarayudu that hit the screens on friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil