பிரபாஸ் - அனுஷ்கா திருமணம்… மீண்டும் தொடங்கிய காதல் கிசு கிசு… இந்த முறையாவது கன்ஃபார்ம் ஆகுமா?

ஐதராபாத்: டோலிவுட்டின் டார்லிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ்.

பிரபாஸுக்கும் முன்னணி நடிகையான அனுஷ்காவுக்கும் இடையே காதல் இருப்பதாக அடிக்கடி வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில், பிரபாஷும் அனுஷ்காவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாக மீண்டும் தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.

டோலிவுட் டார்லிங் டூ பான் இந்தியா பேச்சுலர்

டோலிவுட் டார்லிங் டூ பான் இந்தியா பேச்சுலர்

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோவாக அசத்தி வரும் பிரபாஸ், பாகுபலி படம் வெளியான பின்னர் பான் இந்தியா ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். பிரபாஸ் இன்று பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக வலம் வந்தாலும், தெலுங்கு ரசிகர்களுக்கு எப்போதும் டார்லிங்காகவே மாஸ் காட்டுகிறார். 42 வயதான பிரபாஸ், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சுலராகவே வாழ்ந்து வருகிறார். பிரபாஸின் திருமணம் குறித்து திரையுலகமே அதிக எதிர்பார்ப்பில் இருக்க, அவரோ இதுவரை எந்த தகவலும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்.

பரபரக்கும் பிரபாஸ் அனுஷ்கா காதல்?

பரபரக்கும் பிரபாஸ் அனுஷ்கா காதல்?

இந்நிலையில், சில வருடங்களாகவே பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் இடையே காதல் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இருவரும் லிவிங்கில் இருப்பதாகவும் சுட சுடச் செய்திகள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து ஒருமுறை பேசியிருந்த "அனுஷ்கா, எங்களுக்குள் காதல் இல்லை, நாங்கள் இருவருமே நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம்" எனத் தெரிவித்திருந்தார். ஆனாலும், இருவருமே விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக அடிக்கடி கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன.

மீண்டும் தொடங்கிய காதல் கிசு கிசு

மீண்டும் தொடங்கிய காதல் கிசு கிசு

பாகுபலி படத்துக்குப் பின்னர் பிரபாசுக்கும் அனுஷ்காவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை, இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால், பிரபாஸ் - அனுஷ்கா திருமணத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் பிரபாஸ் - அனுஷ்கா இருவரும் திருமணம் செய்துகொள்ள ரெடியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பிரபாஸின் பெரியப்பாவும் நடிகருமான கிருஷ்ணம் ராஜூ காலமானார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த போது, பிரபாஸும் அனுஷ்காவும் ஒன்றாக போய் கிருஷ்ணம் ராஜூவை நலம் விசாரித்து வந்தனர்.

சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க

சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க

கிருஷ்ணம் ராஜூ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது பிரபாசுடன் சென்று அனுஷ்கா பார்த்த புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி வைரலானது. கிருஷ்ணம் ராஜூ மரணம் குறித்தும் வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டு இருந்தார் அனுஷ்கா, ஆஸ்பத்திரியில் சந்தித்த பிரபாஸிடம் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கிருஷ்ணம் ராஜூ சொன்னதாகக் கூறப்படுகிறது. இதனால், மீண்டும் பிரபாஸ், அனுஷ்கா காதல் உறுதியாகிவிட்டது என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் எனவும் தெரிகிறது. ஆனாலும், இதுவரை இருவரும் இந்த தகவல்களை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X