»   »  இந்த நாள், இளையராஜாவின் வாழ்வில் மறக்க முடியாத நாள்!

இந்த நாள், இளையராஜாவின் வாழ்வில் மறக்க முடியாத நாள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைஞானி இளையராஜா இசையமைக்க வந்து இன்றுடன் 41 ஆண்டுகள் ஆகிறது.

மனம் மகிழ்ச்சியாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் இளையராஜா பாடல்களை தேடும். அத்தகைய இளையராஜா மே 14ம் தேதியை மட்டும் மறக்கவே மாட்டார்.

காரணம் அவர் இசையில் திரைப்பாடல் முதல்முதலாக வெளியான நாள் மே 14ம் தேதி தான்.

அன்னக்கிளி

இன்னல்கள் கண்டு இடிந்துகிடக்கும் பலகோடு இதயங்களுள் இறுகிக்கிடக்கும் இந்த ஆண்தாயின் முதல் படமான அன்னக்கிளியின் பாடல் வெளியான தினம் 14.5.1976

இசைஞானி

இசைஞானி

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. அவரை உலகிற்கு கொடுத்த படம் அன்னக்கிளி.

மச்சானை பார்த்தீங்களா

மச்சானை பார்த்தீங்களா

தேவராஜ் மோகன் இயக்கத்தில் சிவக்குமார், சுஜாதா நடித்த படம் அன்னக்கிளி. அந்த படத்தில் வந்த மச்சானை பார்த்தீங்களா பாடல் இன்று அளவிலும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையின் ராஜா

இசையின் ராஜா

2 தலைமுறைகளுக்கு மேல் இசை உலகை ஆண்டவர் இளையராஜா. எத்தனை இசையமைப்பாளர்கள் வந்து போனாலும் இசை உலகில் இளையராஜாவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.

English summary
May 14th is an important day for Isaignani Ilaiyaraja as his first song from the movie Annakili got released on this date 41 years ago.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil