»   »  பாலிவுட்காரர்கள் சகிப்பின்மை பற்றி பேசுவது சின்னப்புள்ளத்தனமாக இருக்கு: சத்ருகன் சின்ஹா

பாலிவுட்காரர்கள் சகிப்பின்மை பற்றி பேசுவது சின்னப்புள்ளத்தனமாக இருக்கு: சத்ருகன் சின்ஹா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று பாலிவுட்டில் சிலர் கூறுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்று பாலிவுட் நடிகரும், பாஜக தலைவருமான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்து வந்த இலக்கிய திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகரும், பாஜக தலைவருமான சத்ருகன் சின்ஹா கலந்து கொண்டார். சத்ருகன் சின்ஹா நிகழ்ச்சியில் பேசுகையில்,

பாலிவுட்டைச் சேர்ந்த பலர் நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று அவசரப்பட்டு பேசியுள்ளது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட்டில் சாதி, மதம் என்று எந்தவித பாகுபாடும் இல்லை என நடிகை கஜோல் கூறியதை நான் ஒப்புக் கொள்கிறேன். பாலிவுட்டில் வெற்றி மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறது. இவர் பீகாரி, முஸ்லிம் அல்லது இந்து என்று நான் யாரையும் பிரித்துப் பார்த்தது இல்லை.

ரேகா, சச்சின்

ரேகா, சச்சின்

பிரபலங்களான ரேகா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்தும் பல நாட்கள் அவைக்கு வரவில்லை. டைம் பாஸுக்காக அவர்களை ராஜ்யசபாவுக்கு அழைத்து வந்திருக்கவே கூடாது. அவையின் கவுரவத்தை கூட்ட உறுப்பினர்களாக்கப்படும் இது போன்ற பிரபலங்கள் எப்பொழுதுமே அவைக்கு சரியாக வருவது இல்லை என்றார் சின்ஹா.

இமாம் புகாரி

இமாம் புகாரி

நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட புத்தகத்தில் 1992ம் ஆண்டு மும்பையில் பிரச்சனை வெடித்தபோது தற்போதைய இமாம் புகாரியின் சகோதரரை தான் எவ்வாறு காப்பாற்றினேன் என்பது பற்றிய வரிகளை எழுத்தாளர் பாரதி எஸ். பிரதானை வாசிக்க வைத்தார் சின்ஹா.

கரண் ஜோஹார்

கரண் ஜோஹார்

இலக்கிய திருவிழாவின் துவக்க விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் கூறுகையில், கருத்து சுதந்திரம் என்பது தான் உலகின் மிகப்பெரிய ஜோக் மற்றும் ஜனநாயகம் தான் இரண்டாவது பெரிய ஜோக் ஆகும் என்றார்.

English summary
Bollywood actor and BJP lawmaker Shatrughan Sinha today said that it is childish for some in Bollywood to say there is intolerance in the country, and that he does not agree with them.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil