twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "இப்படி ஒரு கதைய உருவாக்குறது சாதாரண விஷயம் இல்ல" ஜாங்கோ பட இயக்குனர்

    |

    சென்னை: திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு திரைப்படமாக உருவாகியுள்ள ஜாங்கோ திரைப்படம் வெள்ளிக்கிழமை வர இருக்கிறது.

    'ஜாங்கோ' என்றால் ஜெர்மானிய மொழியில் 'மீண்டும் எழுவேன்' என்று அர்த்தம். மீண்டும் மீண்டும் வெற்றிப்படங்களை தரும் தயாரிப்பாளருமான சி.வி. குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் சதீஷ் குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், ரமேஷ் திலக் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் வரிசையாய் களமிறங்கியிருக்கின்றனர்.

    வெளியாகி ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அண்ணாத்த பாடல்!வெளியாகி ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அண்ணாத்த பாடல்!

    ஏட்டிக்குப் போட்டி

    ஏட்டிக்குப் போட்டி

    சாந்தனு நடித்திருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படமும் நவம்பர் 19 வெளியாகும் என்று அறிவித்து தற்போது வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். அருண் விஜய் நடித்திருக்கும் பார்டர் படமும் நவம்பர் 19 வெளியாகும் என்று அறிவித்தனர். ஆனால், வெளியீடு தள்ளிப் போயுள்ளது. கோபுரம் ப்லிம்ஸ் தயாரிக்கும் சந்தானம் நடிக்கும் சபாபதி படம் ஓடிடியில் வெளியாகும் என அறிவித்து பின்னர் தியேட்டர் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாங்கோ வெளியாகும் அன்றே சபாபதியும் வர இருப்பது சபாஷ் சரியான போட்டி என்றே ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது

    நம்பிக்கை வீண் போகல

    நம்பிக்கை வீண் போகல

    இத்திரைப்பட உருவாக்கம் பற்றி இயக்குனர் மனோ கூறியபோது " காலச்சக்கரத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கலாம் எனத் தோன்றியது. ஆனால் யார் தயாரிக்க முன் வருவார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இருந்தாலும் நம்பிக்கையோடு இந்தக் கதையை உருவாக்கினேன். ஆனால் நான் நினைத்ததுபோல் திரைக்கதையை அமைக்க முடியவில்லை. கொஞ்சம் சிரமம் இருந்தது. இப்படிப்பட்ட கதை எல்லோருக்கும் புரியுமா என்று யோசனை-யாக இருந்தது. இருந்தாலும் விடாப்பிடியாக எழுதி முடித்தேன்.சி.வி குமாரை சந்தித்து கதையை கூறியபோது கொஞ்சம் கூட தாமதிக்காமல் தான் தயாரிப்பதாக ஒப்புக்கொண்டார். அதுவே எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

    அது வேற இது வேற

    அது வேற இது வேற

    வழக்கமான திரைப்படங்களில் பழைய காலத்திற்கு சென்றும், அல்லது எதிர்காலத்துக்கு வருவதுமாய் இருக்கும். ஆனால் இது ஒரே நாளில் திரும்ப திரும்ப சென்று வருவது போன்று அமைக்கப்பட்டிருக்கும். காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் மிகுந்து இருக்கும். ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல ட்ரீட் தான் என்று கூறினார் இயக்குனர் மனோ.

    குவியும் பாராட்டுக்கள்

    குவியும் பாராட்டுக்கள்

    சவாலான திரைக்கதை மற்றும் பாணியை எடுத்து படம் இயக்கியுள்ள அறிமுக இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தயாரிப்பாளர் தனக்கு சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்து படம் நல்லமுறையில் உருவாக காரணமாக இருந்ததற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் மனோ. நவம்பர் 19 அன்று வெளியாக இருக்கும் ஜாங்கோவிற்கு பலத்த எதிர்பார்ப்புகளும் வாழ்த்துக்களும் வந்த வண்ணம் உள்ளது.

    English summary
    It is Difficult to Create a Movie Subject Like This Says Jango Movie Director
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X