2016 துவங்கி 2 மாசம் கூட ஆகல, அதற்குள் பாலிவுட்டில் 5 ஜோடிகள் பிரிந்துவிட்டதே!
மும்பை: 2016ம் ஆண்டு துவங்கி இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில் பாலிவுட்டில் ஐந்து ஜோடிகள் பிரிந்துள்ளன.
2016ம் ஆண்டு துவங்கி இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை. அதற்குள் பாலிவுட்டில் 2 காதல் ஜோடிகள் பிரிந்துவிட்டார்கள். மேலும் 3 திருமணமான ஜோடிகளும் பிரிந்து வாழ்கின்றனர்.
காதலர் தினத்தை அந்த காதல் ஜோடிகள் சேர்ந்து கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர்.

ரன்பிர்-கத்ரீனா
நடிகர் ரன்பிர் கபூரும், நடிகை கத்ரீனா கைஃபும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்து ஆளுக்கொரு பக்கமாக சென்றுவிட்டனர்.

கோஹ்லி-அனுஷ்கா
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிரிக்கெட் வீரர் கோஹ்லி கேட்டதற்கு முடியாது என்று தெரிவித்துவிட்டார் அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா. இந்த காரணத்தால் கோஹ்லிக்கும், அனுஷ்காவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

பர்ஹான்-அதுனா
நடிகர் பர்ஹான் அக்தர் தன்னை விட 6 வயது பெரியவரான அதுனாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 16 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அவர்கள் விவாகரத்து பெறுகின்றனர்.

அர்பாஸ்-மலாய்க்கா
சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானுக்கும் அவரது மனைவியும், நடிகையுமான மலாய்க்காவுக்கும் இடையே பிரச்சனையாம். இதனால் மலாய்க்கா மகனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாராம்.

ஓம் புரி - நந்திதா
பாலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவரான ஓம் புரியும், அவரது மனைவி நந்திதாவும் பிரிந்துவிட்டனர். திருமணமாகி 26 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துள்ளனர். அவர்களின் 18 வயது மகன் இஷான் நந்திதாவுடன் சென்றுவிட்டார்.


Click it and Unblock the Notifications











