»   »  அனிருத்தை கழற்றிவிட்ட சிவா: அப்படியே அஜீத்தையும் கொஞ்சம்...

அனிருத்தை கழற்றிவிட்ட சிவா: அப்படியே அஜீத்தையும் கொஞ்சம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜீத்தின் விசுவாசம் படத்திற்கு இசையமைக்கப் போவது யார்

சென்னை: அஜீத்தின் விசுவாசம் படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது தெரிய வந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் நான்காவது முறையாக நடிக்கும் படம் விசுவாசம். இந்த படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இது அஜீத், நயன்தாரா சேர்ந்து நடிக்கும் நான்காவது படம்.

இந்த படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும் என்று தல ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

விசுவாசம்

விசுவாசம்

வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்தார். இந்நிலையில் விசுவாசத்திற்கும் அவரே இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இசை

இசை

விசுவாசம் படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமான் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிவா

சிவா

அனிருத்தை கழற்றிவிட்டது போன்று அப்படியே எங்க தலயையும் கழற்றிவிட்டால் உங்களுக்கு ரொம்ப புண்ணியமாகப் போய்விடும் சிவா என்று அஜீத் ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.

பிரார்த்தனை

பிரார்த்தனை

சிவா வேறு ஹீரோவிடம் சென்று கதை சொல்லும்போது வெற்றி இயக்குனராக செல்ல வேண்டும் என விசுவாசம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக அஜீத் தெரிவித்தார். இதையடுத்து இந்த படத்தை எப்படியாவது ஹிட்டாக்கி கொடு ஆண்டவா என்று தல ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

மீண்டும்

மீண்டும்

விசுவாசம் சுமாராகப் போனால் எங்கே அஜீத் மீண்டும் சிவா இயக்கத்தில் நடித்துவிடுவாரோ என்ற பயத்தில் தான் தல ரசிகர்கள் தற்போதே இறைவனிடம் பிரார்த்தனை செய்யத் துவங்கிவிட்டனர்.

English summary
D. Imman is the music director of Ajith's upcoming movie Viswasam to be directed by Siva. Anirudh was expected to join hands with Siva and Ajith again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil