»   »  அந்த ஹீரோ என் கெரியரை கெடுக்கல: பதறும் இளம் நடிகை

அந்த ஹீரோ என் கெரியரை கெடுக்கல: பதறும் இளம் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தான் நடிகர் திலீப்பை பற்றி எதுவும் தெரிவிக்கவே இல்லை என்று நடிகை பாமா கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருபவர் பாமா. கேரளாவை சேர்ந்த பாமா மலையாள படங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார்.

திடீர் என்று அவருக்கு பட வாய்ப்புகள் வெகுவாகக் குறையத் துவங்கியது.

நடிகர்

நடிகர்

அண்மையில் மலையாள பத்திரிகையான வனிதாவுக்கு பாமா பேட்டி அளித்தார். தனக்கு பட வாய்ப்புகள் குறைய தான் மதிப்பு வைத்துள்ள சினிமாத் துறையை சேர்ந்த ஒருவரும் இதற்கு காரணம் என்று பாமா தெரிவித்தார்.

திலீப்

திலீப்

பாமா பேட்டியில் பெயரை சொல்லாமல் பேசியது நடிகர் திலீப்பை பற்றி தான். திலீப் தான் பாமாவின் சினிமா வாழ்க்கை அஸ்தமனமாக சதி செய்தது என்று ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர்.

பாமா

பாமா

தான் அளித்த பேட்டியை திரித்து பேசுவதை பார்த்த பாமா ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார். பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தான் கூறிய நபர் நடிகர் திலீப் இல்லை என்று பாமா தெரிவித்துள்ளார்.

புகார்

புகார்

மலையாள திரையுலகை சேர்ந்த நடிகைகள், நடிகர்கள் சிலரின் பட வாய்ப்புகளை திலீப் கெடுத்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் தான் பாமாவின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
Actress Bhama said in a Facebook post that Dileep didn't do anything to ruin her career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil