»   »  இது நிச்சயம் கபாலி 2 இல்லை... புத்தம் புதிய கதை!- பா ரஞ்சித்

இது நிச்சயம் கபாலி 2 இல்லை... புத்தம் புதிய கதை!- பா ரஞ்சித்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் இன்னும் ரஜினி - ரஞ்சித் மறு கூட்டணி குறித்த பேச்சு அடங்கவில்லை.

ரஜினி சாரை இந்த அளவுக்கு ரஞ்சித் ஈர்த்துவிட்டது எப்படி? பெரிய அதிர்ஷ்டக்காரன்யா இந்த ரஞ்சித்... இரண்டு படங்கள் முடித்த ஒருவர், அடுத்தடுத்து இரு பிரமாண்ட சூப்பர் ஸ்டார் படங்களை இயக்குவது சாதாரண விஷயமா? என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

It is not Kabali 2, says Ranjith

இந்தப் படம் கபாலியின் தொடர்ச்சியா? அரசியல் படமா? இந்தப் படமும் ரஞ்சித்தின் பாணியில்தான் இருக்குமா? பக்கா ரஜினி மாஸ் படமாக இருக்குமா? என்றெல்லாம் ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் பேச்சாக உள்ளது.

இந்த நிலையில் படம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார் இயக்குநர் ரஞ்சித். அவரிடம் கேட்டபோது, "நிச்சயம் கபாலியின் தொடர்ச்சியாக அடுத்த படம் இருக்காது. இது புத்தம் புதிய கதை. இதுவரை யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு கோணத்தில் இந்தப் படம் இருக்கும். இது அரசியல் படமா என்பதெல்லாம் இப்போது சொல்ல முடியாது. விரைவில் அனைத்து விவரங்களும் அறிவிக்கப்படும்," என்றார்.

English summary
Director Pa Ranjith says that his next movie with Rajinikanth is definitely not the sequel to Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil