Don't Miss!
- News
"சாம்பாரில்" கொட்டி கிடக்கும் நன்மைகள்.. பெருங்குடல் கேன்சரையே தடுக்குமாம்! வியக்கும் அமெரிக்கா
- Finance
Mukesh Ambani: மீண்டும் முதல் இடம்.. ஒரு வருட கௌதம் அதானி ஆதிக்கம் முடிந்தது.. 16வது இடம்..!
- Sports
ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
உங்க பிறந்த தேதி 8,17 மற்றும் 26 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Technology
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இனிமேல் மருத்துவமனை தான் கதி... சினிமாவை விட்டு விலகும் நாக சைதன்யா பட நடிகை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டி வந்த சாய் பல்லவி, மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் மலர் டீச்சராக ரசிகர்களின் மனதில் நின்றார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியான சாய் பல்லவி, தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீனா அஜித்துக்கே டஃப் கொடுப்பாரு போல.. வில்லன் நடிகர் சாய் தீனா என்னம்மா ப்ரொபோஸ் பண்றாரு!

மறக்க முடியாத மலர் டீச்சர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா', 'ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சிகள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த சாய் பல்லவி, பிரமேம் படத்தில் மலர் டீச்சராக நடித்து புகழின் உச்சத்திற்கேச் சென்றார். முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்ததால், அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். தமிழில் தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்ஜிகே, கார்கி படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, தற்போது சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் சாய் பல்லவி
அதேபோல், தெலுங்கில் வருண் தேஜுடன் ஃபிடா, நாக சைதன்யாவுடன் 'லவ் ஸ்டோரி', நானியுடன் 'ஷியாம் ஷிங்கா ராய்' ஆகிய படங்களிலும் சாய் பல்லவி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வந்த சாய் பல்லவி, அதேநேரம் தனது டாக்டர் கனவையும் விடவில்லை. சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் போதே ஜார்ஜியா சென்று மருத்துவம் படித்த அவர், 2020ம் ஆண்டு தனது படிப்பையும் நிறைவு செய்தார்.

மருத்துவமனை கட்ட முடிவு
இப்போதும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் சாய் பல்லவி, முழுநேரம் டாக்டராக வேண்டும் என முடிவு செய்துவிட்டாராம். நடிப்பில் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது என நினைத்தாரோ என்னவோ, அதை விட்டுவிட்டு கோவையில் மருத்துவமனை கட்ட திட்டமிட்டுள்ளாராம். அதன் பின்னர் சாய் பல்லவி முழுமையாக தனது மருத்துவமனையை நிர்வாகிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து இன்னும் முழுமையாக தகவல்கள் வெளியாகவில்லை.

ரசிகர்கள் அதிர்ச்சி
மலர் டீச்சர், ரவுடி பேபி, கார்கி என சினிமாவில் அருமையான பாத்திரங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, சினிமாவில் இருந்து விலகுவதாக வெளியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிப்பை விடவும் சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களின் ஃபேவரைட்டாகும். சாய் பல்லவி அவரது ஆசைபடி மருத்துவராக போனாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இருப்பினும் சாய் பல்லவி என்ன முடிவு எடுக்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.