மருத்துவமனையில் சமந்தா... மனசு கேக்காத நாகசைதன்யா... சினிமா க்ளைமேக்ஸ் போல மாறும் டைவர்ஸ் முடிவு

சென்னை: சமந்தா மயோசைட்டிஸ் (Mayositis) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

சமந்தா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் சகோதரர் அகிலும் விரைவில் நலம்பெற வேண்டும் என அவருக்கு ஆறுதல் கூறியிருந்தார்.

பான் இந்தியா ஸ்டார் சமந்தா

பான் இந்தியா ஸ்டார் சமந்தா

2010ல் அறிமுகமான சமந்தா. கடந்த 12 ஆண்டுகால சினிமா பயணத்தில் தமிழ், தெலுங்கு, பாலிவுட் என பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார், நாக சைதன்யாவுடன் காதல், திருமணம், பிரிவு என பல சர்ச்சைகளை கடந்த சமந்தா, யசோதா, சாகுந்தலம், விஜய் தேவரகொண்டாவுடன் குஷி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சமந்தாவின் யசோதா பா ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மருத்துவமனையில் சமந்தா

மருத்துவமனையில் சமந்தா

இதனிடையே, சமந்தாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சரும பிரச்னை ஏற்பட்டது. அதற்காக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சைப் பெற்று வந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் உடலில் குளுகோஸ் ஏற்றியபடி சிகிச்சை எடுத்துகொள்ளும் போட்டோவை சமந்தா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். மேலும், அதில், ''நான் சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.

நேரில் சென்ற நாக சைதன்யா

நேரில் சென்ற நாக சைதன்யா

மேலும், "நோயின் பாதிப்பு குறைந்ததும் எல்லோரிடமும் தெரிவித்துக் கொள்ளலாம் என இருந்தேன். ஆனால் இது குணமாக அதிக நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், நல்ல நாட்களையும், மோசமான நாட்களையும் எதிர்கொண்டு வருகிறேன். சீக்கிரம் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவும் கடந்து போகும்" என்று அந்த பதிவில் கூறியிருந்தார். இதனையடுத்து சமந்தாவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் ஆறுதல்களை கூறினர். இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள சமந்தாவை நாக சைதன்யா நேரில் சென்று பார்த்ததாக சொல்லப்படுகிறது.

விவாகரத்து முடிவு

விவாகரத்து முடிவு

நாக சைதன்யா - சமந்தா இருவரும் 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு 2021 வரை மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். நான்கே வருடங்களில் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில், சமந்தாவின் நிலையை பார்த்த நாக சைதன்யா, அவரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது மனம் திறந்து பேசிக்கொண்ட இருவரும் தங்களது விவாகரத்தை கைவிடலாம் என முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் நாகர்ஜுனாவை சமந்தா திடீரென நேரில் சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சமந்தாவும் நாக சைதன்யாவும் நேரில் சந்தித்துக்கொண்டதும், விவாகரத்து முடிவை கைவிடுவதாக வெளியான செய்திகளும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X