ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் இணையும் கோலிவுட் அசுரன்... வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான் இதுதானா?

சென்னை: விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

விடுதலை முதல் பாகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருடன் வெற்றிமாறன் கூட்டணி வைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், மேலும் ஒரு சர்ப்ரைஸ் அப்டேட் கிடைத்துள்ளது.

 விரைவில் விடுதலை

விரைவில் விடுதலை

பொல்லாதவன் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன், தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் வாடிவாசலை இயக்கவுள்ளார். சிவா இயக்கும் சூர்யா 42 படப்பிடிப்பு முடிந்ததும், வாடிவாசல் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஜூனியர் என்டிஆருடன் கூட்டணி

ஜூனியர் என்டிஆருடன் கூட்டணி

இதனிடையே, விஜய், ஷாருக்கான் ஆகியோரை சந்தித்து வெற்றிமாறன் கதை கூறியிருந்தார். அதனால் அவர்களுடன் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைக்கு அந்த கூட்டணி அமைய வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. இதனால் தெலுங்கு டாப் ஹீரோ ஜூனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து ஒரு படம் பண்ண முடிவு செய்துள்ளாராம் வெற்றிமாறன். ஜூனியர் என்.டிஆருக்கு 3 கதைகள் சொன்னதாகவும், அதில் அவர் ஒன்றை செலக்ட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் வெற்றிமாறன் - ஜூனியர் என்.டி.ஆர் காம்போ இணைவது விரைவில் உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

முன்னதாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு வந்திருந்த ஜூனியர் என்.டி.ஆர், கோலிவுட்டில் வெற்றிமாறனுடன் இணைய ஆசை என கூறியிருந்தார். இதனடிப்படையில் வெற்றிமாறன் - ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணி விரைவில் உறுதியாகிவிடும் என்றே தெரிகிறது. வெற்றிமாறனுக்கு எப்போதுமே தனுஷ் தான் ஃபேவரைட் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் விடுதலை, வாடிவாசல் படங்களில் புதிய கூட்டணி அமைத்துள்ளார் வெற்றிமாறன். இதனால் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி என்ன ஆனது என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

 வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்

வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்

ஆனால், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தரமான அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதன்படி வெற்றிமாறன் - ஜூனியர் என்.டி.ஆர் இணையும் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் முதல் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் லீட் ரோலில் நடிக்கவுள்ளாராம். அதன் பின்னர் உருவாகும் இரண்டாம் பக்கத்தில் தனுஷை லீட் ரோலில் நடிக்க வைக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே வட சென்னை இரண்டாம் பாகத்தில் தனுஷ் லீட் ரோலில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், வெற்றிமாறன் - ஜூனியர் என்.டி.ஆர் இணையும் படத்தின் இரண்டாம் பாகத்திலும் தனுஷ் தான் லீட் ரோலில் நடிக்கலாம் என்ற அப்டேட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X