ரைட்ல கமல், லெஃப்ட்ல விஜய்... ஸ்ட்ரைட்டா தனுஷிடம் வண்டியை விட்ட அஜிட் பட இயக்குநர்

சென்னை: நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் இயக்குநர் ஹெச் வினோத்.
அஜித் - ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இந்தக் கூட்டணி துணிவு படத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், ஹெச் வினோத்தின் அடுத்த ஹீரோ யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 மாஸ் காடுமா துணிவு?

மாஸ் காடுமா துணிவு?

சதுரங்க வேட்டை திரைப்ப்டம் மூலம் பிரபலமான ஹெச் வினோத், அடுத்து கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' மூலம் முன்னணி இயக்குநரானார். அதனையடுத்து அஜித்துடன் கூட்டணி சேர்ந்த ஹெச் வினோத், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து மூன்று படங்களை இயக்க்விட்டார். பக்கா ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள துணிவு, பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரவிருக்கிறது. அஜித் - ஹெச் வினோத் கூட்டணிக்கு இந்தப் படம் நிச்சயமாக மாஸ் காட்டும் என சொல்லப்படுகிறது.

 ஹெச் வினோத்தின் அடுத்த ஹீரோ?

ஹெச் வினோத்தின் அடுத்த ஹீரோ?

துணிவு ரிலீஸுக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். தற்காலிகமாக 'ஏகே 62' என்ற டைட்டிலில் அஜித்தின் 62வது படமாக இது உருவாகவுள்ளது. இந்நிலையில், இயக்குநர் ஹெச் வினோத் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. கமல் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கலாம் எனவும் தகவல் வெளியானது.

 தனுஷுடன் புதிய கூட்டணி

தனுஷுடன் புதிய கூட்டணி

ஹெச் வினோத் இயக்கும் படம், கமலின் 233வது திரைப்படமாக உருவாகும் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ஹெச் வினோத் இயக்கும் படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமர்க்களமான ஆக்சன் திரில்லர் கதையை தனுஷுக்கு கூறியுள்ளாராம் ஹெச் வினோத். கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ள தனுஷ், அடுத்தாண்டு இறுதிக்குள் ஹெச் வினோத்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்தப் படம் தனுஷின் 50வது படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

 விஜய்யுடன் இணைகிறாரா ஹெச் வினோத்

விஜய்யுடன் இணைகிறாரா ஹெச் வினோத்

தனுஷ் - ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர், கோப்ரா படங்களை பிரம்மாண்டமாக தயாரித்த 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனம், முதன்முறையாக தனுஷுடன் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஹெச் வினோத் நடிகர் விஜய்யை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளதாகவும் சொல்லப்பட்டன. இந்த கதையை விஜய் ஓக்கே சொல்வாரா, ஹெச் வினோத்துடன் கூட்டணி வைப்பாரா எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X