அஜித், கமல்ஹாசனை தொடர்ந்து தனுஷ்… ஆக்சனில் மிரட்டப் போகும் புது கூட்டணி?
சென்னை: நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் இயக்குநர் ஹெச் வினோத்.
அஜித் - ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
துணிவு படத்தைத் தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கும் திரைப்படம் குறித்து புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

இறுதிக்கட்டத்தில் துணிவு
சதுரங்க வேட்டை மூலம் பிரபலமான ஹெச் வினோத், அடுத்து கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் முன்னணி இயக்குநராக ப்ரோமோட் ஆனார். முதல் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்ததால், அடுத்து அஜித்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. நேர்கொண்ட பார்வை, வலிமை என தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி, இப்போது மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளனர். அஜித்துடன் மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் துணிவு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால், அஜித் ரசிகர்களும் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர்.

கமல்ஹாசனுடன் கூட்டணி?
அஜித்தின் துணிவு படத்தை முடித்ததும் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. துணிவு படத்திற்கு பின்னர் விஜய் சேதுபதியின் படத்தை ஹெச் வினோத் இயக்குவார் என செய்திகள் வெளியாகின. ஆனால், கமல் நடிக்கும் படத்தில் தான் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளாராம். விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இதனால் இந்தப் படத்திலும் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெச் வினோத்தின் அடுத்த ஹீரோ
கமலின் 233வது திரைப்படம் குறுகிய காலத்தில் உருவாகும் விதமாக ப்ளான் செய்யப்பட்டுள்ளதாம். ஹெச் வினோத் இயக்கும் படத்தை முடித்துவிட்டு உடனடியாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளளார். இதனால், ஹெச் வினோத் இப்போதே கமல் நடிக்கும் படத்திற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டாராம். இந்தப் படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு முன்பே ஷூட்டிங் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அடுத்தப் படத்திற்கான கதையையும் ஹெச் வினோத் எழுதிவிட்டாராம். இதில், தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமர்க்களமான ஆக்சன் திரில்லர்
ஹெச் வினோத் தொடர்ந்து தனது படங்களை ஆக்சன் ஜானரில் தான் இயக்கி வருகிறார். ஆனால் அதைவிடவும் அமர்க்களமான ஆக்சன் திரில்லர் கதையை தனுஷுக்கு கூறியுள்ளாராம். இதனால், இந்தப் படம் தனுஷின் கேரியரில் செம்ம மாஸான ஒன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ள தனுஷ், அடுத்தாண்டு இறுதிக்குள் ஹெச் வினோத் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதன்முறையாக தனுஷ் - ஹெச் வினோத் கூட்டணி பற்றி பேச்சுகள் அடிபடுவது, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











