நிவாஷினி வெளியே போனால் அசல் கோளாறு உள்ளே… பிக் பாஸ் போடும் புது கணக்கு… ரசிகர்களின் ரியாக்ஷன்?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோர்த்தாலே பாடல் புகழ் அசல் கோளாறுவும் பங்கேற்றிருந்தார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நிவாஷினியிடம் அசல் கோளாறு அத்து மீறியதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.
இறுதியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் செய்யப்பட்ட அசல் கோளாறு நான் எந்த தவறும் செய்யவில்லை எனத் துணிச்சலாக தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

அசல் கோளாறுவும் சர்ச்சைகளும்
பிக் பாஸ் சீசன் 6ல் சீரியல் நடிகர் அஸிம், அமுதவாணன், ஜிபி முத்து, ராபர்ட் மாஸ்டர், விக்ரமன், ஏடிகே, ரக்ஷிதா, ஆயிஷா, ஷிவின், ஜனனி உள்ளிட்ட மொத்தம் 20 போட்டியாளர்கள் முதல் நாளில் அடியெடுத்து வைத்தனர். இதில், ஜோர்த்தாலே பாடல் மூலம் பிரபலமான அசல் கோளாறும் பங்கேற்றார். அசல் கோளாறுக்கு ஆரம்பத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு காணப்பட்டது. ஆனால் அவர் குயின்ஷி, ஆயிஷா ஆகியோரிடம் அதிகம் பேசியதும், நிவாஷினியிடம் அதிக நெருக்கம் காட்டியதும் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது.

விளக்கம் கொடுத்த அசல்
அசல் கோளாறு, நிவாஷியிடம் எல்லை மீறியதாக நினைத்த ரசிகர்கள் அவரை எவிக்சனுக்குள் தள்ளிவிட்டனர். இதனால் சாந்தியை தொடர்ந்து இரண்டாவது வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் அவர் மீதான விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த அசல், நான் எப்போதும் போல இயல்பாகவே இருந்தேன். நிவாஷினியிடம் நான் நெருங்கி பழகியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் கொடுத்தார். மேலும், நான் எப்போதும் எனது இயல்பை இழக்க மாட்டேன் எனவும் நேர்மையாக பதிலளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வைல்ட் கார்டு என்ட்ரி
இந்நிலையில், வைல்ட் கார்ட்டு என்ட்ரி மூலம் அசல் கோளாறு மீண்டும் பிக் பாஸ் வீட்டில் அடியெடுத்து வைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக் பாஸ் தொடங்கி 35 நாட்களை கடந்துவிட்டதால், விரைவில் வைல்ட் கார்டு என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், மீண்டும் பிக் பாஸ் வீட்டின் உள்ளே செல்ல விருப்பம் உள்ளதாக அசல் கோளாறு தெரிவித்துள்ளாராம். இதனால், அசல் கோளாறுவை பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் அனுப்பலாமா வேண்டாமா என டிஸ்கஷன் நடக்கிறதாம்.

இதுதான் திட்டமா?
அசல் கோளாறுவின் பரிசீலனை ஒருபக்கம் பிக் பாஸ் டீமிடம் இருக்கும் நிலையில், இந்த வாரம் சக போட்டியாளர்கள் எவிக்சன் நாமினேஷனில் நிவாஷினியை லிஸ்ட்டில் சேர்த்துள்ளனர். ஏற்கனவே நிவாஷினியின் பெர்பாமன்ஸ் குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், இந்த வாரம் நிவாஷினி எவிக்சன் ஆகும்பட்சத்தில் அசல் கோளாறு வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் டீமும் இதே திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களும் என்ன நடக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











