தளபதி 67-க்காக மெகா பட்ஜெட்டை ஒதுக்கும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ்… விஜய், லோகேஷ் ஹேப்பி அண்ணாச்சி

சென்னை: வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67ல் நடிக்கவுள்ளார் விஜய்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67-ஐ லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது.

தளபதி 67ல் கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடிக்கலாம் என தகவல் வெளியான நிலையில், புதிய அப்டேட் ஒன்றும் கிடைத்துள்ளது.

உற்சாகத்தில் விஜய்

உற்சாகத்தில் விஜய்

விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படம், தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் இருப்பதாக சொல்லப்பட்டது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்துள்ள புதிய முடிவால், வாரிசு ரிலீஸ் தள்ளிப் போகலாம் எனவும் தகவல் வெளியானது. ஆனால், நேற்று பனையூரில் ரசிகர்களை சந்தித்த விஜய், ரொம்பவே உற்சாகமாக காணப்படுகிறார். மேலும், வாரிசு படமும் சொன்னபடி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. வாரிசு பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததும், தளபதி 67 அப்டேட் உடனடியாக வெளியாகுமாம்.

லோகேஷ் யுனிவர்ஸ்

லோகேஷ் யுனிவர்ஸ்

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி 67ல் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைவதால், அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள 'தளபதி 67' படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளதோடு, பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு பட தமிழ்நாடு தியேட்டர் உரிமையையும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் கைப்பற்றியுள்ளது. இதனிடையே, தளபதி 67 லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் பின்னணியில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67ல் இணையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ்

தளபதி 67ல் இணையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ்

இந்நிலையில், தளபதி 67 படத்தின் தயாரிப்பில் கமல்ஹாசனும் இணைவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தப் படம் லோகேஷ் கனராஜ்ஜின் யுனிவர்ஸாக உருவாகவுள்ளதால், கமல்ஹாசனும் முக்கியமான கேரக்டரில் நடிப்பார் என பேச்சுகள் அடிபடுகின்றன. அதேபோல், சூர்யா ரோலக்ஸ் ரோலிலும், கார்த்தி டில்லி கேரக்டரிலும் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரபரப்பின் நடுவே தான் ராஜ்கமல் ஃபிலிம்ஸும் தளபதி 67 படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளதாம்.

விஜய், லோகேஷ் ஹேப்பி

விஜய், லோகேஷ் ஹேப்பி

விக்ரம் படத்தில் கமல்ஹாசனே எதிர்பார்க்காத பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் கிடைத்தது. உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதால், லோகேஷ்க்கு லெக்ஸஸ் காரை சர்ப்ரைஸ் கிப்ட்டாக கொடுத்து அசத்தினார் கமல். இப்போது தளபதி 67 படத்தின் தயாரிப்பிலும் இணைகிறேன் எனக் கூறியுள்ளாராம். இதற்காக பெரிய பட்ஜெட்டையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் திரைப்படம், மணிரத்னம் இயக்கும் கமலின் 234வது படங்களை தயாரிக்கிறது ராஜ்கமல் பிலிம்ஸ். இப்போது தளபதி 67 படத்திலும் இணைவது ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X