twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “கமல் மீது பழிபோட வேண்டாம்... சீக்கிரமே அவருடன் இணைகிறேன்”: லிங்குசாமி சீக்ரெட் ட்விஸ்ட்

    |

    சென்னை: லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் திரைப்படம் 2015ல் வெளியானது.

    ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், உத்தம வில்லன் படத்தின் தோல்வி குறித்தும் அதன் பின்னணி பற்றியும் இயக்குநர் லிங்குசாமி மனம் திறந்து பேசியுள்ளார்.

    லிங்குசாமியின் ’தி வாரியர்' இந்தி டப்பிங் உரிமை... எத்தனை கோடிக்கு விற்பனை ஆச்சு தெரியுமா?லிங்குசாமியின் ’தி வாரியர்' இந்தி டப்பிங் உரிமை... எத்தனை கோடிக்கு விற்பனை ஆச்சு தெரியுமா?

    கமலின் உத்தம வில்லன்

    கமலின் உத்தம வில்லன்

    எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளை கையிலெடுக்கும் கமல்ஹாசன், 2015ல் உத்தம வில்லன் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை கமலும் கிரேசி மோகனும் எழுத, ரமேஷ் அரவிந்த் இயக்கினார். கமலுடன் பூஜா குமார், ஊர்வசி, கே பாலச்சந்தர், நாசர், ஆண்ட்ரியா, ஜெயராம், பார்வதி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்தது. ஆனாலும், படம் நெகட்டிவான விமர்சனங்களால் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. இங்கே தான் பிரச்சினையும் எழுந்தது, உத்தம வில்லன் படத்தை இயக்குநர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

    நஷ்டமான லிங்குசாமி

    நஷ்டமான லிங்குசாமி

    உத்தம வில்லன் படம் தோல்வியடைந்ததால், தயாரிப்பாளர் லிங்குசாமியின் நிலைமை மிக மோசமானது. பலகோடி ரூபாய் நஷ்டத்தால் ஏராளமான கடனில் சிக்கி ரொம்பவே தள்ளாடிப் போனார். இந்நிலையில், இதுகுறித்து தற்போது தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் லிங்குசாமி மனம் திறந்துள்ளார். அதில், "ஆனந்தம் படத்திற்குப் பிறகு "மதி" என்ற டைட்டிலில் ஒரு கதையை கமல் சாருக்காக வைத்திருந்தேன். ஆனால், அது அப்போது முடியாமல் போனது. அதே கதையை இப்ப திரும்பவும் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். அதில் கமல் சார் கண்டிப்பாக நடிப்பார்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    உத்தம வில்லன் விவகாரம்

    உத்தம வில்லன் விவகாரம்

    முன்னதாக பேசிய லிங்குசாமி, "உத்தம வில்லன் படத்தின் தோல்விக்கு கமல் எனும் மகா கலைஞன் மீது பழி போடாதீர்கள். அவர் கூட படம் பண்ணதே எங்களுக்கு பெரிய விஷயம். எங்க நிறுவனம் இப்படி ஆனதுக்கு அவர் தான் காரணம்னு நான் சொல்லவே மாட்டேன். அப்படி ஒரு வார்த்தை என்னோட வாயில இருந்து வராது, திரும்ப ஒரு படம் பண்ணுவோம்னு கமல் சார் சொல்லியிருக்கார். நான் விரும்பிதான் உத்தம வில்லன் படம் தயாரித்தேன்" எனக் கூறியுள்ளார்.

    தேவர் மகன் தான் காரணம்

    தேவர் மகன் தான் காரணம்

    மேலும், "நான் சினிமாவை அதிகம் கற்றுக்கொண்டது கமல் சாரிடம் இருந்து தான். தேவர் மகன் படத்துக்கு சண்டக்கோழிக்கும் நிறையவே சம்மந்தம் இருக்கு. தேவர் மகன் படத்தை பல முறை பார்த்து, அதிலிருந்தே சணடக்கோழி படத்தை இயக்கினேன். அதேபோல், கமல் சார் வேண்டுமென்றே உத்தம வில்லன் படத்தை எங்கள் தயாரிப்பில் நடிக்கவில்லை. அது இயல்பாக தான் நடந்தது. முதலில் பாபநாசம் படத்தை ரீமேக் செய்ய நினைத்த நாங்கள், அதன் பிறகு இப்போது ஹிட்டான விக்ரம் படம் போன்ற ஒரு கதையை தான் எடுக்க இருந்தோம். ஆனால், அதற்கு பதிலாக உத்தம வில்லன் உருவானது. ஏற்கனவே கமல் சாருக்காக எழுதிய கதை விரைவில் அவர் நடிப்பிலேயே படமாக வரும்" எனவும் லிங்குசாமி கூறியுள்ளார்.

    English summary
    Kamal's Uttama Villain, produced by Lingusamy, was a huge flop. Producer Lingusamy has said that he does not want to blame Kamal for that. He also said that he will soon direct a film starring Kamal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X