Don't Miss!
- News
WFH ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்? வருகிறதா சிறப்பு "அலொவன்ஸ்!" அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன்?
- Lifestyle
உங்க பிறந்த தேதி 6,15 மற்றும் 24 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Technology
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்.. பிரசவ அறை, கை குழந்தை, தாய் மரணம், இண்டர்வியூவ் மத்தியில் பணிநீக்கம்!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
தனுஷ் பட இயக்குநருக்கு நோ சொன்ன ரஜினிகாந்த்... திடீரென மனம் மாற இதுதான் காரணமா?
சென்னை:
ஜெயிலர்
படத்தைத்
தொடர்ந்து
சூப்பர்
ஸ்டார்
ரஜினிகாந்த்
நடிக்கும்
படம்
லால்
சலாம்
என்பது
உறுதியாகியுள்ளது.
லைகா
தயாரிக்கும்
இந்தப்
படத்தை
ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
இயக்க
ஏஆர்
ரஹ்மான்
இசையமைக்கிறார்.
இந்நிலையில்,
டான்
படத்தின்
இயக்குநர்
சிபி
சக்கரவர்த்தியுடன்
ரஜினிகாந்த்
கூட்டணி
அமைக்கவுள்ளதாக
முதலில்
தகவல்
வெளியாகியிருந்தது.
ஜெயிலர்
பட
நடிகர்
கேப்டன்
மில்லர்
படத்தில்
இணைந்தார்...எல்லாமே
மாஸ்டர்
பிளான்
தான்!

தலைவர் 170 பூஜை
ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு லைகா தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினி கமிட் ஆகியுள்ளார். அதில் ரஜினியின் 170வது படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவது உறுதியாகியுள்ளது. லால் சலாம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விதார்த் இருவருமே ஹீரோவாக நடிக்கின்றனர். ரஜினிகாந்த் சிற்ப்புத் தோற்றத்தில் மட்டுமே நடிக்கிறார். அதேநேரம் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட ஆகியுள்ளது, லால் சலாம் படத்தின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

தலைவர் 171 இயக்குநர்
தலைவர் 170 படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்றே முதலில் சொல்லப்பட்டன. சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுக்மான சிபி சக்கரவர்த்தி, அதன் வெற்றிக்குப் பின்னர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியிருந்தார். அப்பொது ரஜினிக்கு கதை சொன்னதாகவும் விரைவில் அந்தப் படம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. தலைவர் 170 படத்தை ஐஸ்வர்யா இயக்குவதால், தலைவர் 171 படம் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் என செய்திகள் வெளியாகின.

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு
மேலும், இந்தப் படத்தில் அரவிந்த் சாமி. ரஜினிக்கு வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல், வைகைப்புயல் வடிவேலும் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலரும் ரஜினி - சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இந்தக் கூட்டணி இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

நோ சொன்ன சூப்பர் ஸ்டார்
ரஜினியின் படத்துக்காக சிபி சக்கரவர்த்தி கதை எழுதும் வேலைகளில் தீவிரமாக இருந்து வந்தாராம். விரைவில் கதை, திரைக்கதை பணிகளை முடித்துவிட்டு அடுத்த ஆண்டே படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்திருந்தார். ஆனால், சிபி சக்கரவர்த்தியின் கதையில் ரஜினிக்கு திருப்தி இல்லை எனவும், அதனால் அந்தப் படத்துக்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ரஜினியின் தலைவர் 171 படத்தின் புதிய இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.