லால் சலாம் படத்துல இப்படி ஒரு கேரக்டரா… பாட்ஷாவுக்கு பின்னர் ரஜினி எடுக்கும் மிரட்டல் அவதாரம்…?

சென்னை: ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அதனைத் தொடர்ந்து லால் சலாம் படத்தில் நடிக்க உள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான ரோலில் நடிக்க, ரஜினி கெஸ்ட் ரோலில் வருகிறார்.

லால் சலாம் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ரஜினியின் கேரக்டர் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்

ஜெயிலர் படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்து லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதில், ஒரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கவுள்ளார். 'லால் சலாம்' என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்தை கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து இயக்குகிறார் ஐஸ்வர்யா. விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். முக்கியமாக இந்தப் படத்தில் ரஜினிக்கு கெஸ்ட் ரோல் என்றே சொல்லப்படுகிறது.

ரஜினியின் கேரக்டர் இது தானா?

ரஜினியின் கேரக்டர் இது தானா?

லால் சலாம் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் 5ம் தேதி போஸ்டருடன் வெளியானது. மேலும், லால் சலாம் படத்தின் பூஜையும் நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், லைகா சுபாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினியின் கேரக்டர் 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே வரும்படி இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனாலும், ரஜினியின் கேரக்டர் செம்ம பவர்புல்லாக இருக்கும் எனவும், இது ரசிகர்களுக்கு தரமான சம்பவமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பாட்ஷா படத்திற்கு பின்னர்

பாட்ஷா படத்திற்கு பின்னர்

ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது பாட்ஷா என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. அதில், மும்பையைச் சேர்ந்த மாணிக் பாட்ஷா என்ற கேங்ஸ்டராக நடித்திருப்பார். லால் சலாம் படத்திலும் ரஜினியின் கேரக்டர் கேங்ஸ்டராக இருக்கும் என சொல்லப்படுகிறது. முக்கியமாக ரஜினி முஸ்லிம் பெயர் கொண்ட கேரக்டரில் நடிக்கவுள்ளாராம். அதேபோல், அந்த முஸ்லிம் கேரக்டரின் பெயரும், பாட்ஷா போல ரொம்ப மாஸாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் உண்மையானால், பாட்ஷா படத்திற்கு பின்னர் ரஜினி முஸ்லிம் கேரக்டரில் நடிப்பது லால் சலாம் படமாக தான் இருக்க முடியும்.

ஷூட்டிங் எப்போது?

ஷூட்டிங் எப்போது?

லால் சலாம் ஷூட்டிங்கை விரைவில் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட உள்ளதாம். அதன் பின்னரே ரஜினியின் காட்சிகளை படமாக்க ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளாராம். நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அதன் பின்னர் உடனடியாக லால் சலாம் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளாராம். ஸ்போர்ட்ஸ் பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகும் லால் சலாம் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X