பொங்கல் ரேஸில் விஜய் - அஜித்... நடுவில் வந்த உதயநிதி... வாரிசு படத்தையும் வாங்கிய ரெட் ஜெயன்ட்?
சென்னை: பொங்கலை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.
அஜித்தின் துணிவு படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளது.
இந்நிலையில், விஜய்யின் வாரிசு படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையையும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் கைப்பற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரெட் ஜெயன்ட் கையில் துணிவு
2023 பொங்கல் ரிலீஸில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் வெளியாகின்றன. எட்டு வருடங்களுக்குப் பிறகு விஜய் - அஜித் படங்கள் மோதவுள்ளதால், ரசிகர்களிடம் இப்போதே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக எந்த படத்துக்கு எத்தனை தியேட்டர்கள் கிடைக்கும், ரசிகர்களிடம் எதற்கு ஆதரவு இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அஜித்தின் துணிவு படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் கைப்பற்றியுள்ளது. இதனால், அஜித்தின் துணிவு படத்திற்கு அதிகமான திரையரங்குகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

விஜய்யின் வாரிசு ரிலீஸ்?
பொங்கலுக்கு சிங்கிளாக வந்து வசூலில் கெத்து காட்டலாம் என நினைத்த விஜய்யின் வாரிசு படத்திற்கு, அஜித்தின் துணிவும் வெளியாகவுள்ளது கொஞ்சம் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தெலுங்கிலும் வாரிசு படத்திற்கு போட்டியாக பிரபாஸின் ஆதிபுருஷ், சிரஞ்சீவியின் வால்டேயர் வீரைய்யா, பாலையாவின் படம் வெளியாகின்றன. இந்நிலையில், துணிவு தமிழக ரிலீஸ் உரிமை ரெட் ஜெயன்ட் கைகளில் போனது, வாரிசுக்கு இன்னும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது விஜய்யின் வாரிசு படத்தையும் ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ்
விஜய்யின் வாரிசு படத்தை ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளதாகவும், அதனை 7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ் பெயரில் வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் உரிமையை வாங்கியிருந்த ரெட் ஜெயன்ட், பெயரை குறிப்பிடாமல் விநியோகம் செய்திருந்தது. அஜித்தின் துணிவு படத்தை தொடர்ந்து விஜய்யின் வாரிசும் ரெட் ஜெயன்ட் கைகளில் போயுள்ளது, எந்த படத்துக்கு அதிகமான ஸ்கீரின்கள் என்ற போட்டியை தவிர்க்கும் என தெரிகிறது. ஆனாலும், இன்னும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

வரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்
இதனிடையே மீண்டும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல்கள் வெளியாக தொடங்கிவிட்டன. அதன்படி, வாரிசு முதல் பாடல், நவம்பர் 5ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தீபாவளிக்கு வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆனால், தீபாவளிக்கு ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட படக்குழு, அடுத்த வாரம் முதல் சூப்பர் அப்டேட்கள் இருக்கும் என கூறியிருந்தது. அதன் அடிப்படையில் வாரிசு முதல் பாடல் நவம்பர் 5ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











