பிறந்தநாள் கொண்டாடும் நாகசைதன்யா… மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் ஆன சமந்தா… பதறிய ரசிகர்கள்
ஹைதராபாத்: சமந்தா சில தினங்களுக்கு முன்னர் மயோசைட்டிஸ் (Mayositis) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட சமந்தா, அதன் பின்னர் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டதாக சொல்லப்பட்டது.
இதனிடையே சமந்தா நடித்த யசோதா திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

சூப்பர் ஹிட் யசோதா
சமந்தா நடித்துள்ள 'யசோதா' திரைப்படம், கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான யசோதா, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் 35 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. சமந்தா இந்தப் படத்தில் வாடகைத் தாயாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. யசோதா படத்தின் வெற்றியால், சமந்தாவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. முன்னதாக சமந்தா மயோசைட்டிஸ் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.

மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
சமந்தாவுக்கு சில வருடங்களுக்கு முன் சரும பிரச்னை ஏற்பட்டது. அதற்காக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சைப் பெற்று வந்ததாக சொல்லப்பட்டது. இதுகுறித்து அவரே தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். உடலில் குளுகோஸ் ஏற்றியபடி சிகிச்சை எடுத்துகொள்ளும் போட்டோவை சமந்தா ஷேர் செய்து, ''நான் சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டு விளக்கம் கொடுத்தார். அதிலிருந்து மீண்டுவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாடும் நாக சைதன்யா
ஹைதராபாத்தில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் சமந்தா அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யசோதா ரிலீஸுக்கு பின்னர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டே படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிவு செய்திருந்தாராம் சமந்தா. ஆனால், திடீரென அவருக்கு உடல்நிலை மோசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. மயோசிட்டிஸ் குணமாக அதிக நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது. இதனிடையே நாக சைதன்யா தனது பிறந்தநாளை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

நேரில் செல்வாரா நாக சைதன்யா
முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த சமந்தாவை, நாக சைதன்யா நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்ததாக சொல்லப்பட்டது. அப்போது இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அதன் பின்னர் அதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், சமந்தா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது உண்மையாக இருந்தால், நாக சைதன்யா அவரை சந்திப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். நாக சைதன்யா - சமந்தா இருவரும் 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு 2021 வரை மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். நான்கே வருடங்களில் இருவரும் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











