ஷங்கரின் முதல் சாய்ஸ் அவரு தான்… ஆனாலும் பிரம்மாண்டமான படத்துக்கு நோ: ரசிகர்கள் அப்செட்

சென்னை: கமலின் இந்தியன் 2, ராம் சரண் நடிக்கும் ஆர்சி 15 படங்களை இயக்கி வரும் ஷங்கரின் அடுத்து வேள்பாரி நாவலை படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. .

மிகப் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள வேள்பாரி திரைப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

முன்னதாக வேள்பாரி நாவலில் ஹீரோவாக நடிக்க ஷங்கர் கோலிவுட் முன்னணி நடிகர் ஒருவரை அணுகி, அவர் நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

15 கோடி பட்ஜெட்டில் பாட்டு

15 கோடி பட்ஜெட்டில் பாட்டு

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என சொல்லப்படும் ஷங்கர், தற்போது கமல் நடிப்பில் இந்தியன் 2, ராம் சரண் நடிக்கும் ஆர்சி 15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களுமே அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருவதால், ஷங்கர் ரொம்பவே பிசியாக காணப்படுகிறார். இந்நிலையில், ராம் சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்திற்காக பிரம்மாண்டமான ப்ளான் ஒன்றை ஷங்கர் போட்டுள்ளாராம். அதன்படி ஒரேயொரு பாடலை நியூசிலாந்தில் படமாக்க முடிவு செய்துள்ள ஷங்கர், அதற்காக 15 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டுள்ளாராம். இதனால், தயாரிப்பு நிறுவனமே ஆடிப் போயுள்ளது. ஆனால், செலவுக்கு ஏற்ற மாதிரி ரிசல்ட் இருக்கும் என்பதால், க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளது.

அடுத்து வேள்பாரி நாவல்

அடுத்து வேள்பாரி நாவல்

இந்நிலையில், ஷங்கரின் அடுத்த படம் குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன்படி சு வெங்கடேசனின் வேள்பாரி நாவலை ஷங்கர் படமாக இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவாகும் வேள்பாரி நாவலில் சூர்யா ஹீரோவாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விருமன் ஆடியோ வெளியீட்டு விழாவில் இதனை சூர்யாவே சூசகமாக பேசியிருந்தார். இதனால், இந்தப் படம் பற்றி சீக்கிரமே அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூர்யாவுக்கு பதில் அந்த ஹீரோ

சூர்யாவுக்கு பதில் அந்த ஹீரோ

வேள்பாரி திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் தயாராக இருப்பதாகவும், இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாகும் என்றும் தெரிகிறது. வேள்பாரி படத்தில் சூர்யாவுடன் கேஜிஎஃப் ஹீரோ யாஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் பட பாணியில் ஷங்கரும் சூர்யாவும் வேள்பாரி நாவலை படமாக எடுக்கவுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தப் படத்தில் சூர்யாவுக்கு முன் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்க ஷங்கர் விரும்பினாராம். ஷங்கரே நேரடியாக விஜய்யிடம் இதுகுறித்து பேசியதாக சொல்லப்படுகிறது.

நோ சொன்ன விஜய்

நோ சொன்ன விஜய்

விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகரின் சிஷ்யரான ஷங்கர், நண்பன் படத்தில் மட்டுமே விஜய்யை நடிக்க வைத்தார். அதுவும் இந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வேள்பாரி படத்தில் நடிக்க விஜய் நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கான காரணங்கள் பற்றி எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே விஜய் பொன்னியின் செல்வன் படத்திலும் விஜய் நடிக்க முடியாமல் போனது. இப்போது இன்னொரு பீரியட் படமான வேள்பாரியிலும் விஜய் நடிக்கவில்லை என்பது, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X