அஜித்துக்காக பாலிவுட்டில் இருந்து திரும்பும் இயக்குநர்… AK 63க்கு ரெடியாகும் அல்டிமேட் காம்போ

சென்னை: அஜித்தின் துணிவு படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், ஏகே 63 படம் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

துணிவு படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 63வது பட இயக்குநர் யார் என்ற போட்டியில் இரண்டு பேர் முன்னணியில் இருக்கின்றனர்.

அஜித்தின் ஏகே 62

அஜித்தின் ஏகே 62

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் ரேஸில் களமிறங்க ரெடியாகி வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து 'ஏகே 62' படத்தில் நடிக்க அஜித் தயாராகிவிட்டார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 ஷூட்டிங் ஜனவரியில் தொடங்கும் எனவும், இதில் திரிஷா நாயகியாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால், ரசிகர்களிடம் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஏகே 63 இயக்குநர்

ஏகே 63 இயக்குநர்

ஏகே 62 படத்தை தொடர்ந்து லைகா தயாரிக்கும் மேலும் இரண்டு படங்களில் நடிக்க அஜித் கமிட் ஆகியுள்ளார். இதில், ஏகே 63 படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு படங்களில் அஜித் - சிவா கூட்டணி இணைந்து பணியாற்றியது. மீண்டும் இந்தக் கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளியானதோடு, இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ஏகே 63 இயக்குநர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பில்லா இயக்குநருடன் கூட்டணி

பில்லா இயக்குநருடன் கூட்டணி

இந்நிலையில், அஜித்தின் ஏகே 63 படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் இயக்குநராக அஜித் விஷ்ணுவர்தனை தேர்வு செய்துள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர்களில் விஷ்ணுவர்தனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பில்லா, ஆரம்பம் என இரண்டு படங்களில் இணைந்துள்ள இக்கூட்டணி, மூன்றாவது படத்திலும் மீண்டும் இணையும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

விஷ்ணுவர்தன் மேக்கிங்

விஷ்ணுவர்தன் மேக்கிங்

குறும்பு படத்தில் இயக்குநராக அறிமுகமான விஷ்ணுவர்தன், 2007ல் இயக்கிய பில்லா அவருக்கு தரமான கம்பேக் படமாக அமைந்தது. அவருக்கு மட்டும் இல்லாமல் அஜித்தின் ஸ்டைலிஷான நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்தார் விஷ்ணுவர்தன். சமீபத்தில் பாலிவுட் பக்கம் சென்ற விஷ்ணுவர்தன், ஷெர்ஷா என்ற படத்தை இயக்கி சூப்பரான கம்பேக் கொடுத்தார். இந்தப் படம் பாசிட்டிவான விமர்சங்களைப் பெற்றதோடு, வசூலிலும் கவனிக்க வைத்தது. இந்நிலையில், அஜித்துக்காக பாலிவுட்டில் இருந்து மீண்டும் சென்னை திரும்புகிறாராம் விஷ்ணுவர்தன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X