பிக் பாஸ் வைல்ட் கார்டு என்ட்ரில இவங்களா…? அப்போ சண்டைக்கு பஞ்சமே இருக்காதே!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 34 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நேற்று மகேஸ்வரியும் எவிக்சன் செய்யப்பட்டார்.
இந்நிலையில், வைல்ட் கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டில் நுழையும் போட்டியாளர் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.

வெளியேறிய மகேஸ்வரி
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் ரசிகர்களிடம் அதிகம் ஆதரவைப் பெற்ற ஜிபி முத்து போட்டி தொடங்கிய பத்து நாட்களுக்குள்ளாகவே வெளியேறினார். அதேபோல், மைனா நந்தினி 21வது போட்டியாளராக சீசன் 6 தொடங்கிய ஒருவாரத்திற்கு பின்னர் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்நிலையில், சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்சன் செய்யப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் மகேஸ்வரியும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இப்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.

இந்த வாரம் எவிக்சன் யார்?
இந்த வாரம் அகம் டிவி வழியே போட்டியாளர்களுடன் பேசிய கமல், ஆயிஷா கம்பேக் கொடுத்துள்ளதை பாராட்டினார். அதேநேரம் ஃபேக்டரி டாஸ்க்கில் முறைகேடு செய்த தனலட்சுமியை கடுமையாக கண்டித்தார். ஆனாலும், இறுதியாக ராம் - மகேஸ்வரி இருவரில் யார் வெளியேறப் போகிறார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகேஸ்வரி எவிக்சன் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வாரத்துக்கான போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில், தனலட்சுமி, ஆயிஷா, ஜனனி, நிவாஷினி, அசீம் ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் முன்னணியில் இருப்பதாக தெரிகிறது.

வைல்ட் கார்டு என்ட்ரி
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி 5வது வாரத்தை நெருங்கி விட்டதால், வைல்ட் கார்டு மூலம் யார் என்ட்ரி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. ஜிபி முத்து மீண்டும் வருவார் என சொல்லப்பட்டது. ஏற்கனவே அவர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் உடனடியாக வெளியேறிவிட்டார். அதனால், அவரை மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பினால் சரியாக இருக்குமா என பேச்சு அடிபடுதாம். அதேநேரம் அவருக்கு மக்களிடம் அதிக ஆதரவு இருப்பதால் ஜிபி முத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்த போட்டியாளரா?
அதேபோல், இன்னொரு பக்கம், வைல்டு கார்டு போட்டியாளராக விஜே பார்வதி என்ட்ரி ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் இந்த விஜே பார்வதி. இப்போது விஜய் டிவியின் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் விளையாடி வருகிறார். கொஞ்சம் அதிரடிக்கு பெயர் பெற்ற பார்வதியை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பினால், செம்ம எண்டர்டெயின்மெண்டாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால், பிக் பாஸ் டீமும் பார்வதியை வைல்ட் கார்ட் மூலம் உள்ளே அனுப்பலாமா என டிஸ்கஷன் செய்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











