»   »  'அது' நடந்து 1 வருஷமாச்சு ஆனால் மறக்க முடியல: பாலியல் தொல்லை குறித்து நடிகை பேட்டி

'அது' நடந்து 1 வருஷமாச்சு ஆனால் மறக்க முடியல: பாலியல் தொல்லை குறித்து நடிகை பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலியல் தொல்லைக்கு ஆளாகி ஓராண்டு ஆனபோதிலும் அது நேற்று நடந்தது போன்று இன்னும் நினைவில் இருப்பதாக தொலைக்காட்சி நடிகை ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.

பாபிஜி கர் பர் ஹை என்ற பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த ஷில்பா ஷிண்டே அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் சஞ்சய் கோஹ்லி மீது மும்பை போலீசில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தொல்லை

தொல்லை

பல பிரச்சனைகள் இருந்தன. சூழலும் சரியில்லை. அதனால் தான் பாலியல் தொல்லை குறித்து முன்பே என்னால் பேச முடியவில்லை. அது நடந்து ஓராண்டு ஆனாலும் நேற்று நடந்தது போன்று நினைவில் உள்ளது.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்கள் அனைவரையும் எனக்கு எதிராக திருப்பிவிட்டனர். அதுவும் போதவில்லை என்று இந்த பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

போலீஸ்காரர்

போலீஸ்காரர்

சஞ்சய் மீது புகார் அளிக்க காவல் நிலையம் சென்றேன். போலீஸ்காரர் என்னை மூன்று நாட்கள் காக்க வைத்து அதன் பிறகே புகாரை ஏற்றுக் கொண்டார்.

உடல்நலம்

உடல்நலம்

என்னிடம் அவர்கள் நடந்து கொண்ட விதத்ததால் என் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடந்த 7 முதல் 8 மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தேன் என்கிறார் ஷில்பா.

English summary
Actress Shilpa Shinde said that though the incident happened a year ago it is still fresh in her memory. Shilpa filed a FIR against the producer of Bhabi Ji Ghar Par Hai for sexual harassment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil