»   »  ஹய்யா என் தல கனவு நிறைவேறிடுச்சே: துள்ளிக் குதிக்கும் லட்சுமி மேனன்

ஹய்யா என் தல கனவு நிறைவேறிடுச்சே: துள்ளிக் குதிக்கும் லட்சுமி மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறிவிட்டதாக நடிகை லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார்.

வீரம் படத்தை அடுத்து சிறுத்தை சிவா, அஜீத் இணைந்துள்ள படம் தல 56. படத்திற்கு அச்சமில்லை என்ற தலைப்பை சிவா தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் அதை அவர் மட்டும் உறுதி செய்ய மாட்டேன் என்கிறார்.

இந்நிலையில் அஜீத்துக்கு ராசியான வியாழக்கிழமை அன்று தல 56 படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

பின்னி மில்ஸ்

பின்னி மில்ஸ்

தல 56 படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் துவங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொல்கத்தாவில் உள்ள பிரபல சால் போன்று சென்னை பின்னி மில்ஸில் செட் போட்டு அங்கேயே படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.

லட்சுமி வந்தாச்சு

லட்சுமி வந்தாச்சு

படப்பிடிப்பின் முதல் நாள் அண்ணன் அஜீத், பாசக்கார தங்கச்சி லட்சுமி மேனன் நடித்த காட்சிகளை படமாக்கினர். இன்று படத்தின் நாயகி ஸ்ருதி ஹாஸன் அஜீத்துடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.

கனவு

கனவு

அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறிவிட்டதாக லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

தல தீபாவளி

தல தீபாவளி

தல 56 படத்தின் படப்பிடிப்பை விறுவிறுவென நடத்தி படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் சிவா. இதனால் அஜீத் ரசிகர்கள் தற்போதே தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி என்று பாட ஆரம்பித்துவிட்டனர்.

முதல் முறை

முதல் முறை

அஜீத்துடன் சேர்ந்து நடிப்பது லட்சுமி மேனனுக்கும் சரி, ஸ்ருதி ஹாஸனுக்கும் சரி இதுவே முதல் முறை ஆகும். மேலும் அனிருத்தும் முதல் முறையாக அஜீத் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Thala 56 has got kickstarted in Chennai on thursday with Ajith and Lakshmi Menon.
Please Wait while comments are loading...