»   »  'அது' பிரேம்ஜி ஜாதகத்திலேயே இருக்கு: கங்கை அமரன்- எக்ஸ்க்ளூசிவ்

'அது' பிரேம்ஜி ஜாதகத்திலேயே இருக்கு: கங்கை அமரன்- எக்ஸ்க்ளூசிவ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரேம்ஜி விரைவில் பெரிய படத்திற்கு இசையமைக்க உள்ளார். அவருக்கு மியூசிக்கில் நல்ல எதிர்காலம் உண்டு என்பது அவர் ஜாதகத்திலேயே உண்டு என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு எக்ஸ்க்ளூசிவாக பேட்டி அளித்துள்ளார். நடிகர் சங்கத்தில் என்ன தான் நடக்கிறது என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது,

நடிகர் சங்கம்

நடிகர் சங்கம்

ஏற்கனவே இருந்த பிரச்சனையை தீர்க்கிறேன் என்று சொல்லி தானே வந்தீர்கள், அப்ப ஏன் தீர்க்கவில்லை. நடிகர் சங்கத்தில் பிரச்சனையாக உள்ளது என்று சொல்லிவிட்டு வந்து ஒன்னும் செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம். தயாரிப்பாளர் சங்கத்தில் மறுபடியும் அவர்களே வந்து உட்கார்ந்துள்ளனர். இதுவும் அரசியல் கட்சி மாதிரி ஆக்குவது எனக்கு விருப்பமில்லை.

படம்

படம்

சென்னை 28-2 படத்தில் நான் நடிக்கவில்லை. நானாக வந்துவிட்டு சென்றுள்ளேன். இது போன்று படங்களில் நடிக்க நான் ரெடி. பாட, பாட்டு எழுத, நடிக்க, வேலை செய்ய தானே உள்ளோம். கடைசி வரை வேலை செய்தால் மகிழ்ச்சி.

துட்டு

துட்டு

சினிமாவில் நடித்தால் துட்டு வரும். அதனால் பிற வேலைகளை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு வந்து நடிக்கலாம். என்னை பிறரிடம் சிபாரிசு செய்யுங்கள். நான் கண்டிப்பாக நடிப்பேன்.

பிரேம்ஜி

பிரேம்ஜி

பிரேம்ஜியிடம் எந்த பெண்ணை காண்பித்தாலும் பிடிக்கவில்லை என்கிறான். அவர் ஸ்டோரியே சொல்ல முடியாத ஸ்டோரியாக உள்ளது. மகாலட்சுமி மாதிரி பெண் வேண்டுமாம். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை தவறாமல் கோவிலுக்கு செல்லும் பெண் வேண்டுமாம். இந்த ஆண்டாவது செட் ஆகும் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையில் தான் கோவில், கோவிலாக சென்று கொண்டிருக்கிறேன்.

ஜாதகம்

ஜாதகம்

அப்பாவுக்கு சிரமம் வைக்காத பிள்ளைகள் என் மகன்கள். நல்ல பிள்ளைகள் கிடைத்துள்ளதற்கு சந்தோஷப்படுகிறேன். பிரேம்ஜி விரைவில் பெரிய படத்திற்கு இசையமைக்க உள்ளார். அவருக்கு மியூசிக்கில் நல்ல எதிர்காலம் உண்டு என்பது அவர் ஜாதகத்திலேயே உண்டு என்றார் கங்கை அமரன்.

English summary
Multi talented Gangai Amaran said that his son Premgi Amaran has a good future in music and it is there in his horoscope.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil