»   »  என்னை பார்த்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா?: தமன்னா மீது தர்மதுரை தயாரிப்பாளர் புகார்

என்னை பார்த்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா?: தமன்னா மீது தர்மதுரை தயாரிப்பாளர் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் நடிகை தமன்னா மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

தமன்னா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு தமன்னா வருவது இல்லை. ஆனால் தெலுங்கு, இந்தி படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் கலந்து கொள்கிறார்.


இதனால் கோலிவுட் தயாரிப்பாளர்கள் தமன்னா மீது கோபத்தில் உள்ளனர்.


தேவி

தேவி

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த தர்மதுரை படத்தை விளம்பரப்படுத்த தமன்னா வரவில்லை. இந்நிலையில் அவர் பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்துள்ள தேவி படத்தை விளம்பரப்படுத்த கடந்த 27ம் தேதி சென்னை வந்தார்.


தர்மதுரை

தர்மதுரை

தேவி பட விளம்பரத்திற்காக சென்னை வந்த தமன்னாவை பார்த்து தர்மதுரை தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் கோபம் அடைந்தார். நம் படத்தை விளம்பரப்படுத்த அழைத்தபோது வராத தமன்னா தேவிக்காக மட்டும் வந்துள்ளாரே என்று கடுப்பானார். இதையடுத்து அவர் இது தொடர்பாக தமன்னா மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.


தமன்னா

தமன்னா

தமிழ் பட விளம்பர நிகழ்ச்சிகளை மட்டும் புறக்கணிக்கும் தமன்னாவை ஏற்கனவே தயாரிப்பாளர்கள் நோட் பண்ணியுள்ளனர். இனியும் அவர் தமிழ் பட விளம்பரங்களை புறக்கணித்தால் அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் சுரேஷ் புகார் அளித்துள்ளார்.


ஏ.எல். விஜய்

ஏ.எல். விஜய்

ஏ.எல். விஜய் இயக்கியுள்ள தேவி தமிழ் தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இந்தி நடிகர் சோனு சூத், பாலிவுட்டில் செட்டிலான பிரபுதேவாவுடன் சேர்ந்து தமன்னா படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Dharmadurai producer RK Suresh has filed a complaint against Tamanna in Nadigar sangam after seeing her promoting the upcoming movie Devi. Tamanna faild to promote Vijay Sethupathi starrer Dharmadurai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil