twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்லா கவனிச்சி பாருங்க.. ஐடி ரெய்டுகள் "ஒரு பிரபலத்துக்கு" நெருக்கமானவர்களைச் சுற்றியே இருக்கே.. ஓஹோ

    |

    இன்று காலை முதல் நடந்து வரும் ரெய்டுகள் ஒரு பிரபலத்தை சுற்றி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பு தகவல் சுற்றுகிறது. பைனான்சியர் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட திரை பிரபலங்கள் வீடுகள் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    வரி ஏய்ப்பு செய்ததாக வந்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த ரெய்டுகள் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடந்து வருகிறது.

    அந்த 3 ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க மாட்டேன்...ஏன் ஜான்வி கபூருக்கு அவங்களுடன் என்ன பிரச்சனை? அந்த 3 ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க மாட்டேன்...ஏன் ஜான்வி கபூருக்கு அவங்களுடன் என்ன பிரச்சனை?

    திரைத்துறையில் பெரிய அளவிலான ரெய்டு இதுதான்

    திரைத்துறையில் பெரிய அளவிலான ரெய்டு இதுதான்

    தமிழகத்தின் திரைத்துறை பிரபலங்களான பைனான்சியர், விநியோகஸ்தர் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல்ராஜா, எஸ்.ஆர். பிரபு, சத்யஜோதி தியாகராஜன், 2 டி நிறுவனம் சம்பந்தப்பட்டவர்கள் இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த வருமானவரித்துறை ரெய்டு சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வருகிறது. இதில் அன்புச்செழியன், அவரது சகோதரர் அழகர்சாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடந்து வருகிறது.

    கொரோனா பேரிடர் வீழ்ச்சியில் இருந்து எழும் நிலையில் ரெய்டு

    கொரோனா பேரிடர் வீழ்ச்சியில் இருந்து எழும் நிலையில் ரெய்டு

    தமிழ் திரையில் முக்கிய முன்னணி பிரபலங்களான இவர்களது வீடுகள் அலுவலகங்களில் நடக்கும் ரெய்டு திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமீப காலமாக இவர்கள் சம்பந்தப்பட்ட படங்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என தமிழ் சினிமாவை சுற்றி மிகப் பெரிய அளவில் நிதி புரள்வது இந்த ரெய்டுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமா கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டெழுந்து முழுவீச்சில் வேகமான அளவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக்கொண்டிருக்கிறது.

    100 கோடியை தாண்டும் பெரிய பட்ஜெட் படங்கள்

    100 கோடியை தாண்டும் பெரிய பட்ஜெட் படங்கள்

    தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பல பிரபலங்களின் முக்கிய படங்கள் நூறு கோடியைத்தாண்டும் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளிவந்து பல நூறு கோடி ரூபாய் அளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ளது. சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் 500 கோடி ரூபாய் அளவிற்கு பெரிய அளவில் வசூலை வாரி குவித்துள்ளது. இது தவிர புதிய படங்கள், புதிய நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய அளவில் பட்ஜெட்டுடன் படம் தயாரிப்பு வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

    திரைத்துறையினருக்கு ரெய்டு முட்டுக்கட்டையா?

    திரைத்துறையினருக்கு ரெய்டு முட்டுக்கட்டையா?

    பல படங்கள் சிறப்பாக வெளியாகி வெற்றிப்பெற்று இயல்பு நிலை திரும்பும் நேரத்தில் இந்த ரெய்டு திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமீபகாலமாக எந்தவித இடையூறுமின்றி மிக சிறப்பாக போய்க்கொண்டிருந்த தமிழ் திரையுலகின் பயணத்தில் இந்த ரெய்டு ஒரு பெரிய முட்டுக்கட்டை எனலாம். அதிலும் குறிப்பாக அன்புச்செழியன் வீடு அலுவலகங்களில் இரண்டாம் முறையாக நடக்கும் இந்த ரெய்டு மிகப்பெரிய அதிர்ச்சியை திரையுலக வட்டாரத்தில் ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகம் பெரும்பாலும் அன்புச்செழியனை சுற்றியே இருக்கிறது என்று சொல்லலாம். தமிழ் திரையுலகின் சிறிய பெரிய தயாரிப்பாளர்கள் அன்புச்செழியனிடம் நிதி பெற்று படத்தை தயாரிக்கின்றனர்.

    சிறியவர், பெரியவர் அன்புச்செழியன் எப்போது பேசப்படும் பொருள்

    சிறியவர், பெரியவர் அன்புச்செழியன் எப்போது பேசப்படும் பொருள்

    நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கு நிதி உதவி அன்புச்செழியன் என்ற தகவல் திரையுலக வட்டாரத்தில் வெளியாகி உள்ளது. இதற்கு ஏற்றார்போல் அவர் விக்ரம் பட ப்ரமோஷன்களில் கமல்ஹாசனுடன் தோன்றியதும் நினைவிருக்கலாம். ஆகவே பெரும்பாலான படங்களுக்கு நிதியுதவி அளிப்பது அன்புச் செழியன் என்பதால் அவர் எப்போதும் திரையுலகினர் மத்தியில் மதிப்புடன் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் இந்த ரெய்டு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதே நேரத்தில் இந்த ரெய்டு ஒரு முக்கிய பிரபலத்தை சுற்றி நெருக்கமானவர்களிடம் நடத்தப்படுவதாக ஒரு பேச்சு சினிமா வட்டாரத்தில் உலாவுகிறது.

    அந்தப்பிரபலம் இவரா? ஏதாவது வலுவான காரணம் இருக்கா?

    அந்தப்பிரபலம் இவரா? ஏதாவது வலுவான காரணம் இருக்கா?

    அந்த பிரபலம் நடிகர் சூர்யா என்று கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பல வாதங்கள் திரைத்துறை வட்டாரத்தில் வைக்கப்படுகிறது. நடிகர் சூர்யா நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள வாடிவாசல் படத்தை தயாரித்து வெளியிடுபவர் கலைப்புலி தாணு. இதேபோல் ஞானவேல்ராஜா சூர்யாவிற்கு நெருக்கமானவர், வியாபார தொடர்புள்ளவர். சூர்யாவின் நெருங்கிய உறவினர் எஸ்.ஆர்.பிரபு. சூர்யாவுடன் வியாபார தொடர்புள்ளவர் ஆகவே தற்போது நடக்கும் ரெய்டு சம்பந்தப்பட்ட அனைவரும் ஏதோ ஒரு வகையில் சூர்யாவுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்கிற இது அவரை சுற்றி உள்ளவர்களை நோக்கி நடக்கும் ரெய்டு என்ற ஒரு வதந்தி சினிமா வட்டாரத்தில் ஓடுகிறது.

    சூர்யாவுக்கு உரிய மரியாதை சரியாக கொடுக்கப்படுகிறது

    சூர்யாவுக்கு உரிய மரியாதை சரியாக கொடுக்கப்படுகிறது

    அதே நேரம் நடிகர் சூர்யா தனது கருத்துக்களை வலுவாக வைத்தாலும் அவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. அவர் இந்த ஆண்டு சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் சூர்யாவிற்கு உரிய மரியாதை தரப்பட்டது, சிறந்த நடிகராக அவர் தேர்வு செய்யப்பட்டது மட்டுமல்ல அவரது நிறுவனம் தயாரித்த சூரரைப்போற்று படத்திற்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டதுமே அவர் எந்த அளவுக்கு கலைஞராக மதிக்கப்படுகிறார் என்பதற்கான சாட்சியங்கள் என ஒரு தரப்பினர் வலுவாக வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

    வருமான வரித்துறையின் நடவடிக்கை எப்படி இருக்கும்?

    வருமான வரித்துறையின் நடவடிக்கை எப்படி இருக்கும்?

    எது எப்படியோ ரெய்டு சம்பந்தப்பட்ட அனைவரும் ஏதோ ஒரு வகையில் சூர்யாவுடன் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் இத்தகைய வதந்திகள் சினிமா வட்டாரத்தில் உலாவி வருகிறது என்றே புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் வருமான வரித்துறை இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. அதன் வேலைகள் ஒரு நாள், ஒருவாரத்தில் நடப்பதல்ல. இது பல நாள் கண்காணிப்பின் கீழ் முழுவதுமாக நடக்கும் ஒரு அலுவல் ரீதியான நடவடிக்கை என்பதே நாம் வதந்திகளுக்கும் சொல்லும் பதில்.

    English summary
    Rumors are circulating in the film circles that the raids that have been going on since this morning are surrounding a celebrity.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X