twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதுப் பசங்களை டைரக்ட் பண்றது ரொம்பக் கஷ்டம்.. பிரபுதேவா

    By Sudha
    |

    மும்பை: புதுமுகங்களை வைத்து இயக்குவது என்பது ரொம்பக் கஷ்டமான விஷயம் என்று கூறியுள்ளார் நடனக்காரராக இருந்து, மாஸ்டராக உயர்ந்து, பின்னர் நடிகராகி தற்போது இயக்குநராக வலம் வரும் பிரபுதேவா.

    அப்பா வழியில் டான்ஸராக அறிமுகமானவர் பிரபுதேவா. ஒரே மாதிரியாக ஆடிக் கொண்டிருந்த தமிழ் ஹீரோக்களுக்கு மத்தியில் இவரது அதிரடி நடனம் வித்தியாசமாக தெரிந்தது, இன்ஸ்டன்ட் வெற்றியாகவும் மிளிர்ந்தது.

    சிறிய வயதிலேயே டான்ஸ் மாஸ்டராகவும் அவதாரம் எடுத்த பிரபுதேவா குறுகிய காலத்தில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று போற்றப்படும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நின்றார்.

    இவரும் ஹீரோவானார்

    இவரும் ஹீரோவானார்

    டான்ஸ் மட்டுமே ஆடிக் கொண்டிருந்த பிரபுதேவா திடீரென ஹீரோவானார். நடனத்தோடு நடிப்பையும் அதிரடியையும், காமெடியையும் கலந்து கொடுத்து ஹிட் ஆனார்.

    காமெடி பலம்

    காமெடி பலம்

    பிரபுதேவாவுக்கு காமெடி சிறப்பாக வந்தது. இதனால் அவரை தமிழ் ரசிகர்கள் ஹீரோவாக உடனடி அங்கீகாரம் கொடுத்து முன்னணிக்கு உயர்த்தினர்.

    இயக்குநரானார்

    இயக்குநரானார்

    நடித்துக் கொண்டிருந்த பிரபுதேவா திடீரென அதை நிறுத்தி விட்டு இயக்குநராக புது அவதாரம் எடுத்தார். தெலுங்கில் அவர் இயக்கிய முதல் படம் ஹிட் ஆகவே அப்படியே போக்கிரி மூலம் தமிழுக்கு வந்தார்.

    விஜய்யுடன் இணைந்து மாஸ் ஹிட்

    விஜய்யுடன் இணைந்து மாஸ் ஹிட்

    விஜய்யுடன் இணைந்து அவர் கொடுத்த போக்கிரி விஜய்க்கு தனி முத்திரை பதிக்க உதவியது. மிகப் பெரிய ஹிட் ஆனது.

    இந்தியிலும் கலக்குவோம்ல

    இந்தியிலும் கலக்குவோம்ல

    இப்போது இந்தியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா. 2009ல் அவர் இயக்கத்தில் வெளியான சல்மான் கானின் வான்டட் சூப்பர் ஹிட் ஆனால் இந்தியிலும் பிரபுதேவாவுக்கு மார்க்கெட் கிடத்தது.

    ரவுடி ரத்தோர்

    ரவுடி ரத்தோர்

    2010ல் அக்ஷய் குமாரை வைத்து அவர் கொடுத்த ரவுடி ரத்தோர் சூப்பர் ஹிட் ஆகி பிரபுதேவாவை முன்னணி இயக்குநராக மாற்றி விட்டது.

    இப்ப ராம்போ ராஜ்குமார்

    இப்ப ராம்போ ராஜ்குமார்

    தற்போது ராம்போ ராஜ்குமார் என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா. இதில் ஷாஹித் கபூர், சோனாக்ஷி சின்ஹா இணைந்து நடித்து வருகின்றனர்.

    குஜராத்தில் முகாம்

    குஜராத்தில் முகாம்

    இந்தப் படத்தின் ஷூட்டிங்குக்காக தற்போது குஜராத் மாநிலம் கோண்டல் என்ற இடத்தில் படக்குழுவினருடன் முகாமிட்டுள்ளார் பிரபுதேவா.

    தயாரிப்பாளரும் இவரே

    தயாரிப்பாளரும் இவரே

    இப்படத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்கிறாராம் பிரபுதேவா. இதன் மூலம் இந்தியில் தயாரிப்பாளர் அவதாரத்தையும் அவர் எடுத்துள்ளார்.

    முழு நீள காமெடி கலாட்டா

    முழு நீள காமெடி கலாட்டா

    ராம்போ ராஜ்குமார் முழு நீள காமெடி கலாட்டாப் படமாம். இப்படத்தில் சண்டைக் காட்சிகளுக்காக தற்போது குஜராத்தில் முகாமிட்டுள்ளனராம். சோனாக்ஷிக்கும் சண்டைக் காட்சி உண்டாம்.

    புதுசுன்னா கஷ்டம்...

    புதுசுன்னா கஷ்டம்...

    படப்பிடிப்புக்காக வந்த இடத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அனுபவம் வாய்ந்த நடிகர்களை எளிதில் வேலை வாங்கி விடலாம். ஆனால் புதுமுகங்களை நடிக்க வைப்பதுதான் ரொம்பக் கஷ்டம் என்றார்.

    அதுவும் சரிதான்...!

    English summary
    Having worked with superstars like Salman Khan and Akshay Kumar in his films, choreographer-turned-director Prabhu Deva says it's a challenge to direct newcomers. In 2009 Prabhu Deva made his directorial debut in Bollywood with 'Wanted'. The Salman Khan-starrer was a huge hit and then in 2010 he made another superhit 'Rowdy Rathore' with Akshay Kumar. Both of them were action films
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X