வேள்பாரி படத்துல ரன்வீர் சிங் ஹீரோ இல்லை.. அதெல்லாம் வெறும் உருட்டு.. ஷங்கரின் பிளானே வேற!

சென்னை: இயக்குநர் ஷங்கர் வேள்பாரி படத்தை இயக்கப் போவதாக கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டியில் இருந்து ரசிகர்கள் அந்த படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளனர்.

நடிகர் சூர்யா தான் வேள்பாரியாக ஷங்கர் படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் கேஜிஎஃப் நடிகர் யஷ் நடிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் கிளம்பின.

இந்நிலையில், புதிய உருட்டாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வேள்பாரி படத்தில் அதுவும் ஹீரோவாக நடிக்கப் போவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தி என கூறப்படுகின்றன.

ஷங்கருக்கும் அந்த ஆசை

ஷங்கருக்கும் அந்த ஆசை

இந்திய சினிமாவுக்கே பிரம்மாண்ட படங்களை எப்படி எடுக்க வேண்டும் என வகுப்பெடுத்த இயக்குநர் ஷங்கர் இதுவரை ஒரு ராஜாங்க படத்தையும் இயக்கவில்லை. ஷங்கர் ஒரு பக்கம் எந்திரன், 2.0 என டெக்னாலஜி பக்கம் செல்ல, இயக்குநர் ராஜமெளலி மகதீரா, பாகுபலி என ராஜாங்க படத்தை இயக்கி உலகளவில் பிரபலம் ஆகி விட்டார். சமீபத்தில் இயக்குநர் மணிரத்னமே பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்த நிலையில், தற்போது இயக்குநர் ஷங்கருக்கும் அந்த ஆசை வந்து விட்டது.

வேள்பாரி படம்

வேள்பாரி படம்

முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் பாரி எப்படி மூவேந்தர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்கிற சூப்பரான வரலாற்று கதையை தழுவி உருவான வேள்பாரி நாவலை மையமாக வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்க ஷங்கர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அதுபற்றிய தகவல்களை வெளியிட இந்தியன் 2, ராம்சரண் படங்களை முடித்த கையோடு ஷங்கர் அந்த படத்தைத் தான் இயக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

சூர்யா இல்லை

சூர்யா இல்லை

ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள வேள்பாரி படத்தில் நாயகனாக நடிகர் சூர்யா நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. பின்னர், கன்னட நடிகர் யஷ் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், தற்போது பாலிவுட் நடிகர் வேள்பாரியாக நடிக்கப் போகிறார் சூர்யா இல்லை என்கிற தகவல் ஒன்று பரவலாக சென்று கொண்டிருக்கிறது.

ரன்வீர் சிங் வேள்பாரியா

ரன்வீர் சிங் வேள்பாரியா

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வேள்பாரியாக நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்து விட்டார் என்று புது உருட்டு ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ரன்வீர் சிங்கை ஷங்கர் சந்தித்தது தான் இந்த வதந்தி காட்டுத்தீயாக பரவ காரணம் என்கின்றனர். ஆனால், இது முழுக்க வதந்தி தான் என்றும் ஷங்கர் நிச்சயம் வேள்பாரியாக ஒரு தமிழ் நடிகரைத்தான் நடிக்க வைப்பார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அந்நியன் ரீமேக்

அந்நியன் ரீமேக்

ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ராம்சரண் படம் முடியவுள்ள நிலையில், அந்த படத்தை ஆரம்பிக்கும் பேச்சுக்கள் தான் நடைபெற்றது என்றும் வேள்பாரி படத்திற்கான பணிகளை ஷங்கர் துவங்க இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X