நடிப்பில் இறங்கிய பிரபல நட்சத்திரத் தம்பதியின் மகள்.. ஆஹா அள்ளுதே... அப்பாவுடன் முதல் விளம்பர படம்!

By

திருவனந்தபுரம்: பிரபல நட்சத்திரத் தம்பதியின் மகள், தனது அப்பாவுடன் விளம்பர படம் ஒன்றில் சேர்ந்து நடித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் ஜெயராம். இவர் தமிழில் முறைமாமன், கோலங்கள், தெனாலி, பஞ்சதந்திரம், ஏகன், துப்பாக்கி, உத்தமவில்லன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இப்போது மணிரத்னம் இயக்கும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

பூவுக்குள் பூகம்பம்

பூவுக்குள் பூகம்பம்

இவர் நடிகை பார்வதியை காதலித்து கடந்த 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பார்வதி, மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில், தியாகராஜன் இயக்கி நடித்த, பூவுக்குள் பூகம்பம் என்ற படத்தில் நடித்துள்ளார். ஜெயராம்- பார்வதி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். மகன் காளிதாஸ் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மீன் குழம்பும் மண்பானையும் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மாளவிகா ஜெயராம்

அடுத்து அவர் நடித்துள்ள 'ஒரு பக்கக் கதை' படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள அவர், அடுத்து ஜேக் அண்ட் ஜில், பேக்பேக்கர்ஸ் என்ற படங்களில் நடித்து வருகிறார். இவரது சகோதரி மாளவிகா ஜெயராம். வெளிநாட்டில் படித்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன் மாடல் உலகில் அடி எடுத்து வைத்தார். சில நாட்களுக்கு முன்பு, திருமண ஷூட் என்று சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

திருமணமா?

மஞ்சள் உடையில் இருந்த அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், திருமணமா? என்று கேட்டிருந்தனர். ஆனால், அது விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட போட்டோ என்று கூறியிருந்தார் மாளவிகா. இப்போது வேறொரு விளம்பர படம் ஒன்றில் தனது தந்தை ஜெயராமுடன் இணைந்து அவர் நடித்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சரியான நேரம்

சரியான நேரம்

வீடியோவில், மலபார் கோல்டு விளம்பரத்துக்காக இருவரும் நடித்துள்ளனர். கேப்ஷனாக, 'இது சரியான நேரம் இல்லை என்று தெரியும். இது ஒரு முயற்சி, உங்கள் ஆதரவும் அன்பும் தேவை. என் தந்தையுடன் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை வழங்கிய மலபார் கோல்டு நிறுவன குடும்பத்துக்கு நன்றி. உங்கள் ஊக்கம் இல்லை என்றால் இதை செய்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு நெட்டிசன்ஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X