»   »  பாவனாவை அசிங்கப்படுத்தியதற்கு பின்னால் சதி இருப்பதை முதலில் கூறியது யார் தெரியுமா?

பாவனாவை அசிங்கப்படுத்தியதற்கு பின்னால் சதி இருப்பதை முதலில் கூறியது யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை பாவனா கடத்தலுக்கு பின்னால் பெரிய சதி உள்ளது என்று வெளிப்படையாக முதல் ஆளாக தெரிவித்ததே திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தான்.

நடிகை பாவனாவை கடத்தி மானபங்கப்படுத்திய வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் மேலும் சில பெருந்தலைகள் சிக்கும் என்று கூறப்படுகிறது.

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர்

பாவனாவை கடத்தி அசிங்கப்படுத்தியதை கண்டித்து மலையாள திரையுலகம் சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியர் கலந்து கொண்டார். பாவனா சம்பவத்திற்கு பின்னால் சதி இருக்கிறது என்று முதலில் வெளிப்படையாக கூறியதே மஞ்சு தான்.

கிசுகிசு

கிசுகிசு

பாவனா சம்பவத்திற்கு திலீப் தான் காரணம் என்று மலையாள திரையுலகில் ஆளாளுக்கு கிசுகிசுத்தார்களே தவிர யாரும் அதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

தோழி

தோழி

மஞ்சு வாரியரும், பாவனாவும் நெருங்கிய தோழிகள். திலீப் மஞ்சு வாரியரின் கணவராக இருந்தபோது காவ்யா மாதவனுடன் நெருங்கிப் பழகியதை பார்த்த பாவனா கோபம் அடைந்து அதை தனது தோழியிடம் தெரிவித்தார். அதற்கு பழிவாங்கவே திலீப் பாவனாவை ஆள் வைத்து அசிங்கப்படுத்திவிட்டார் என்று கூறப்படுகிறது.

திலீப்

திலீப்

திலீப்பை பிரிந்தாலும் அவர் மீது மரியாதை வைத்துள்ளார் மஞ்சு வாரியர். திலீப்பிற்கு எதிராக இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் உள்ளார் மஞ்சு.

Actress Abduction Case: Manju Warrier Should be Appreciated | Oneindia Malayalam
வேதனை

வேதனை

பாவனா வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டுள்ளது மஞ்சு வாரியரை வேதனை அடைய வைத்துள்ளது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Dileep's former wife Manju Warrier was the first person to openly say that there is a criminal conspiracy behind Bhavana abduction incident.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil