twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெல்லும் வீரருக்கு கார் பரிசளிப்பதா.? இயக்குனர் தங்கர் பச்சான் கேள்வி

    By
    |

    சென்னை: ஜல்லிக்கட்டில் வெல்லும் வீரர்களுக்கு கார் பரிசளிப்பதை விட, உழவுத் தொழில் தொடர்பான கருவிகள் வழங்கினால் அவர் வாழ்வு மேன்மை அடையும் என்று இயக்குனர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.

    பொங்கல் முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

    உங்கள் அனைவரின் வன்மமும் இப்போது விஷமாக மாறி நிற்கிறது.. புரமோவை பார்த்து குஷியாகும் நெட்டிசன்ஸ்! உங்கள் அனைவரின் வன்மமும் இப்போது விஷமாக மாறி நிற்கிறது.. புரமோவை பார்த்து குஷியாகும் நெட்டிசன்ஸ்!

    இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் மாடுபிடி வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    உழவுத் தொழில்

    உழவுத் தொழில்

    இதில் முதல் பரிசாக, முதலமைச்சர் ஒரு காரும் துணை முதலமைச்சர் ஒரு காரும் பரிசாக தருவதாக செய்தி வெளியானது. இந்நிலையில், காருக்கு பதிலாக உழவுத் தொழில் தொடர்பான கருவிகளை வழங்கலாமே என பிரபல இயக்குனர் தங்கர் பச்சான் யோசனை தெரிவித்துள்ளார்.

    ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு

    இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக முதலமைச்சர் ஒரு காரும் துணை முதலமைச்சர் ஒரு காரும் பரிசாக தருவதாகச் செய்தி அறிகிறேன். தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியை பல தடைகளை தாண்டி நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

    வழங்கப்படும் பரிசுகள்

    வழங்கப்படும் பரிசுகள்

    இப்போட்டியில் வென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இதே போல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    கூடுதல் மகிழ்ச்சி

    கூடுதல் மகிழ்ச்சி


    இந்த காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலம் இவற்றைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்! தயவு கூர்ந்து முதல்வரும் துணை முதல்வரும் இக்கோரிக்கைக் குறித்து சிந்திக்க வேண்டும்.

    பெட்ரோல் விலை

    பெட்ரோல் விலை

    இனிமேலாவது அவ்வீரர் வாழ்க்கை முன்னேற்றம் காணும் விதமான பரிசினை தந்து ஊக்கப்படுத்துவார்கள் என நம்புகிறேன். பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

    English summary
    Thangar Bachan said that It would be better if cows and farming land were given to the Jallikattu winners, rather than giving a car.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X