»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:நடிகர் வடிவேலு, நடிகைகள் அம்பிகா, கோவை சரளா ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள வடிவேலுவின் வீட்டிலும், கோடம்பாக்கத்தில் உள்ள அவரது மேனேஜர் முருகேசனின் வீட்டிலும் ஒரே நேரத்தில் இச் சோதனைகள் நடந்தன.

அதே போல வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள நடிகை அம்பிகான் வீட்டிலும் இச் சோதனை நடந்தது. நடிகை கோவை சரளாவுக்குச் சொந்தமான விருகம்பாக்கம் வீட்டிலும் சோதனை நடந்தது.

ஒரு படத்துக்கு ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கி வரும் வடிவேலு முறையான கணக்குக் காட்டவில்லை எனறு தெரிகிறது. அம்பிகா அந்தக் காலத்தில் ஏகப்பட்ட சொத்து குவித்தார். இப்போதும் டிவி மூலம் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் நகைச்சுவையில் சக்கை போடு போடும் கோவை சரளாவும் நிறைய பணம் சம்பாதித்து வருகிறார்.

வருமான வரி விழிப்புணர்வு குறும்படம்:

இதற்கிடையே நடிகர் கமல்ஹாசன், நடிகை ஸ்னேகா ஆகியோர் நடித்து, ஷங்கர் இயக்கியுள்ள வருமான வரி கட்டுவது தொடர்பானவிளக்கப் படத்தை சென்னை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.

வருமான வரி கட்டுவது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை உருவாக்குவதற்காக இந்த விளக்கப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியொன்றில் சென்னை வருமான வரித் துறை இயக்குநர் ராதா பாலகிருஷ்ணன் இந்தப் படத்தைவெளியிட்டார்.

இதில் நடிகை சுகுமாரியும் நடித்துள்ளார். இந்த விளக்கப் படம் பொது மக்களுக்கு தொலைக் காட்சிகள், தியேட்டர்கள், கேபிள் டிவிக்கள்மூலம் திரையிட்டுக் காட்டப்படும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil