»   »  லிங்கா படத்துக்கும் ரஜினி சாருக்கும் எதிரான சதி இது! - தயாரிப்பாளர்

லிங்கா படத்துக்கும் ரஜினி சாருக்கும் எதிரான சதி இது! - தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லிங்கா படத்துக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கும் எதிரான சதிதான் இந்த சிங்கார வேலன் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் செய்திருப்பது என்றார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

நேற்று லிங்கா செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு அவருடன் சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு முன் மேடையிலேயே, சிங்கார வேலன் மற்றும் அவருடனிருப்பவர்கள் நோக்கம் லிங்காவுக்கு நஷ்டஈடு கேட்பது போலத் தெரியவில்லை. படத்தைக் கெடுக்க வேண்டும், ரஜினி சாருடைய நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்பது போலத்தான் இருந்தது.

Its a conspiracy against Rajini and Lingaa - Rockline Venkatesh

தன்னை அவர் ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொண்டே, ரஜினி பெயரை இவ்வளவு மோசமாகக் கெடுக்கிறார் என்றால் இவர் பின்னணி என்ன என்று பார்க்க வேண்டும்.

நிச்சயம் இந்த உண்மைகள் வெளிவரும் என்று கூறியிருந்தார்.

பின்னர் அவரிடம், இது யாருடைய தூண்டுதல் என நினைக்கிறீர்கள்? படம் வாங்குவது போல நாடகமாடி, இப்படி ஒரு மோசடியை அரங்கேற்றியுள்ளார்களா? என்றோம்.

Its a conspiracy against Rajini and Lingaa - Rockline Venkatesh

'நிச்சயம் அப்படித்தான் தோன்றுகிறது. படத்தை வாங்கி வெளியிட்டவர் செய்ய வேண்டிய வேலை என்ன? அதை அடுத்த கட்டத்துக்கு புரமோட் பண்ண கூப்பிடலாம். அல்லது வசூல் குறைந்தால், அதை கூட்ட என்ன செய்யலாம் என்று எங்களைக் கேட்டிருக்கலாம்... குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை படத்தின் ஓட்டத்தைப் பார்த்துவிட்டு என்னிடம் கணக்கு வழக்கைக் காட்டியிருக்கலாம்.

இந்தத் தொழிலில் ஒப்பந்தம் போன்றவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான். மனிதாபிமான அடிப்படையில் பார்த்துக் கொள்ளலாம். இந்த சிங்கார வேலனோ, படத்தைக் கெடுப்பதில்தான் குறியாக இருந்தார்.

எவ்வளவு ஆயிரம் பேர் கஷ்டப்பட்டு, எத்தனை கோடி செலவழித்து உருவாக்கப்பட்ட பிரமாண்ட படம் அது.. அதுவும் ரஜினி என்ற மகா மனிதர், தெய்வம் நடித்த படம். மக்கள் ரசித்துப் பார்த்தார்கள். குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து பார்க்கத் தொடங்கியபோது, இப்படி அபாண்டமாக பேசிவிட்டதால், சிடியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு பண்ணிவிட்டார்கள். திருச்சி பகுதியில் உள்ள என் நண்பர் ஒருவரே கூட இதைச் சொன்னார்.

இது முறையான வியாபாரமில்லை. இப்படி இருந்தால் இன்டஸ்ட்ரி நிலைக்காது. சிங்கார வேலன் மாதிரி ஆட்கள் அரசியலுக்குப் போகட்டும். சினிமாவை விட்டுவிடுங்கள்.

யாருடைய தூண்டுதலில், திட்டமிட்ட சதியில் சிக்கி அவர் இதைப் பண்ணியிருந்தாலும், அந்த உண்மைகள் நிச்சயம் வெளியில் வரும்," என்றார்.

English summary
Its a conspiracy against Rajini and Lingaa - Rockline Venkatesh
Please Wait while comments are loading...