»   »  விக்ரமுக்கு தேசிய விருது தராதது... தேசிய விருதுகளுக்கான இழப்பு என்கிறார் பி.சி.ஸ்ரீராம்

விக்ரமுக்கு தேசிய விருது தராதது... தேசிய விருதுகளுக்கான இழப்பு என்கிறார் பி.சி.ஸ்ரீராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐ படத்திற்காக விக்ரமுக்கு விருது அளிக்காதது தேசிய விருதுகளுக்கான இழப்பு என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

63வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் உடலை வருத்தி நடித்திருந்த ஐ படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்காதது தமிழ் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.


இது தொடர்பாக ரசிகர்கள் தங்களது வேதனையை சமூகவலைதளங்களில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.


ஐ...

ஐ...

பிரம்மாண்டத்திற்குப் பேர் போன ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த படம் ஐ. கடந்தாண்டு ஜனவரியில் ரிலீசான இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, . ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.


விக்ரம்...

விக்ரம்...

நான்கு வெவ்வேறான கதாபாத்திரத்திற்கென உடல் எடையைக் கூட்டிக் குறைத்து கடுமையாக இப்படத்திற்கென உழைத்திருந்தார் விக்ரம். எனவே, விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

கடந்தாண்டு ஜனவரி 10ம் தேதி சென்சார் செய்யப்பட்ட படம் என்பதால், தேசிய விருதுகள் தேர்வு பட்டியலில் 'ஐ' திரைப்படம் இருந்தது. ஆனால், நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் ஐ படத்திற்கு ஒரு விருது கூட இல்லை.


ஏமாற்றம்...

ஏமாற்றம்...

இதனால், விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தங்களது ஏமாற்றத்தை சமூகவலைதளப் பக்கங்களில் அவர்கள் பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர். ஐ படக்குழுவும் இது தொடர்பான அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.


பி.சி.ஸ்ரீராம்...

பி.சி.ஸ்ரீராம்...

இந்நிலையில், 'ஐ' படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்காதது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், ‘விக்ரமுக்கு (கென்னி) விருது ஏதும் இல்லை. வருந்துகிறேன்.
தேசிய விருதுகளுக்கான இழப்பு...

தேசிய விருதுகள் பல நேரங்களில் அதன் நோக்கத்தை இழந்துவிடுகிறது. என்னைப் பொருத்தவரை இது விக்ரமுடைய இழப்பு அல்ல; இது தேசிய விருதுகளுக்கான இழப்பு." என பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.


English summary
No award for vikram (kenny). sorry, the nation awards many times misses its point. Its not vikrams loss its loss to the national awards’ the ace cinematographer P.C.Sreeram said in twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil