Don't Miss!
- Sports
"இவ்வளவு நாளா இது தெரியலையே.. இஷான் கிஷானுக்கு நிறைய விஷயம் தெரியல".. கவுதம் கம்பீர் கடும் விளாசல்!
- Lifestyle
உங்க குடலில் இந்த பிரச்சினைகள் இருந்தால் உங்களால் உடலுறவில் சரியாக செயல்பட முடியாதாம்...பார்த்து நடந்துக்கோங்க
- News
பாகிஸ்தானில் இடைத்தேர்தல்.. 33 தொகுதியிலும் நானே போட்டி.. இம்ரான் கான் தடாலடி முடிவு
- Technology
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- Finance
ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வு செய்யவே இல்ல.. எல்லாம் தவறு.. அதானி குழுமம் ஒரே போடு..!
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் டைட்டிலை தட்டித் தூக்கிய ராஜு.. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் டைட்டிலை ராஜு ஜெயமோகன் வென்றுள்ளார்.
பாவனி வெளியேறிய பின்னர் பிக் பாஸ் வீட்டுக்குள் உலகநாயகன் கமல்ஹாசனே நேரில் சென்றார்.
ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரியங்கா மற்றும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராஜுவை பார்த்து வாழ்த்துக்களை கூறினார்.
பழைய சாதத்தை பரிமாறும் பிக் பாஸ்.. மீண்டும் மீண்டும் பயண வீடியோவா.. அட போங்க பாஸ் முடியல!

கமலுடன் புகைப்படம்
பிக் பாஸ் வீட்டுக்குள் உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளே சென்று இறுதி போட்டியாளர்களான பிரியங்கா மற்றும் ராஜுவுக்கு தனது வாழ்த்துக்களை கூறினார். ஏற்கனவே பிரியங்காவுக்கு மைக் மற்றும் ராஜுவுக்கு பேனா பரிசளித்த கமல் இருவருடனும் புகைப்படம் எடுத்து உடனடியாக அது ஃபிரேம் செய்யப்பட்டும் பரிசாக வழங்கப்பட்டது.

ராஜுவா? பிரியங்காவா?
பிரியங்காவின் கையை உயர்த்திய கமல் இப்படி ஒத்திகை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் ஒரு வருடம் ஆகிவிட்டது அல்லவா? ராஜுவா அல்லது பிரியங்காவா? யார் கையை இப்படித் தூக்கி வெற்றியாளரை அறிவிக்கப் போகிறேன் என பார்க்கலாம் என இருவரது கையையும் மாறி மாறி தூக்கினார் கமல்.

வின்னர் ராஜு
இறுதியில் கமல்ஹாசன் ராஜுவின் கையை உயர்த்திப் பிடிக்க பின்னாடி உள்ள பெரிய திரையில் டைட்டில் வின்னர் ராஜு என தோன்றியது. பட்டாசு வெடிக்க ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் ராஜுவின் அம்மா மற்றும் மனைவி ஆர்ப்பரிக்க டைட்டில் வின்னராக மாறினார் ராஜு ஜெயமோகன்.

கடைசி வரை டவுட்
டைட்டில் வின்னராக வந்து விடுவேன் என ரொம்பவே எதிர்பார்த்து விட்டேன் அதனால் கடைசியில் கிடைக்காமல் போய் விடுமோ என்றே நினைத்தேன் சார். சிவகார்த்திகேயன் அண்ணா வந்ததும் தம்பி வெளியே வான்னு சொல்லி கூப்பிட்டு விடுவாரோன்னு பயந்தேன் சார் என கடைசி வரை தனக்கு கோப்பை கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற சந்தேகத்துடனே இருந்ததாக ராஜு கூறினார்.

பிரியங்கா வாழ்த்து
என் கோபாலுக்கு டைட்டில் கிடைத்தது ரொம்ப சந்தோஷம் சார். அவன் கிட்ட இருக்குற பொறுமை என்கிட்ட இல்லை என ரொம்பவே ஃபீல் பண்ணியிருக்கிறேன். அதை கற்றுக் கொண்டால் கொஞ்சமாவது எடுத்துச் சென்றால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் சார். தாரிகா உங்களுக்கு நல்ல கணவர் கிடைத்திருக்கிறார் என பிரியங்கா மனதார வாழ்த்தினார்.

50 லட்சம் பரிசு
வழக்கம் போலவே இந்த சீசனிலும் ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை டைட்டில் வின்னர் ராஜுவுக்கு வழங்கப்பட்டது. ராஜுவின் அம்மா கண்ணீர் மல்க வணக்கம் தெரிவித்தார். மனைவி தாரிகா சந்தோஷத்தில் பேச்சே வராமல் கணவர் ராஜுவை கட்டியணைத்த நெகிழ்ச்சியான தருணங்களுடன் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தது. அடுத்து பிக் பாஸ் அல்டிமேட் எனும் பிக் பாஸ் ஒடிடி விரைவில் ரசிகர்களை குஷிப்படுத்த காத்திருக்கிறது.