Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கஷ்டம் தான் ஆனா, திரும்பவும் காதலிக்க மனசு இல்ல: நாக சைதன்யாவை பிரிந்தது குறித்து சமந்தா அதிரடி!
மும்பை: காஃபி வித் கரன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார்.
கரன் ஜோகரின் 'காஃபி வித் கரன் 7' நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அக்சய் குமாருடன் கலந்துகொண்டார் சமந்தா.
அப்போது திருமண வாழ்க்கை குறித்து கரன் ஜோகர் எழுப்பிய கேள்விகளுக்கு நச்சென்று பதில் சொல்லி அசரடித்துள்ளார் சமந்தா.
பாலிவுட் இயக்குநர் கரன் ஜோகர் தொகுத்து வழங்கும் 'காஃபி வித் கரன் 7' நிகழ்ச்சியில், நடிகை சமந்தா பாலிவுட் நடிகர் அக்சய் குமாருடன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அக்சய் குமாருடன் "ஊ சொல்றீயா மாமா" பாடலுக்கு சமந்தா போட்ட குத்தாட்டம் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில், சமாந்தாவின் திருமணம், விவாகரத்து குறித்து கரன் ஜோகர் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர் மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
சென்னை
திரும்பினார்
அஜித்..
அடுத்த
வாரத்தில்
ஏகே61
சூட்டிங்கில்
பங்கேற்பு!

நாக சைதன்யா - சமந்தா விவாகரத்து
சமந்தா நடிப்பில் 'தி பேமிலி மேன்' வெப் சீரிஸ் உட்பட மேலும் சில படங்கள் வெளியானது முதல், சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சமந்தாவின் உச்சபட்ச கவர்ச்சி, நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு முகசுழிப்பை ஏற்படுத்தியதாகவும், அதனால் இருவரும் பிரிந்ததாகவும், ஏராளமான கருத்துகள் இணையத்தில் வைரலாகின.

ட்ரோல் செய்யப்பட்ட சமந்தா!
சமந்தா - நாக சைதன்யா இருவரும் பிரிவதாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஒன்றாக அறிவித்தனர். 2017ல் திருமணம் செய்துகொண்ட இந்த நட்சத்திர தம்பதியின் இல்வாழ்க்கை, நான்கே வருடங்களில் முடிவுக்கு வந்தது. இதனால், சோஷியல் மீடியாக்களில் சமந்தா அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார். அவை எதற்கும் ரியாக்ட் செய்யாத சமந்தா, தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

கஷ்டமா இருந்தாலும் அதுதான் தீர்வு
'காஃபி வித் கரன் 7' நிகழ்ச்சியில் திருமணம் குறித்து கரன் சில கேள்விகளை சமந்தாவிடம் முன்வைத்தார். அதற்கு பதிலளித்துள்ள சமந்தா, "மேரேஜ் வாழ்க்கையில் இணக்கமில்லாத சூழலின் போது பிரிவதைத் தவிர வேறு வழியில்லை. அது கடினமான முடிவாக இருந்தாலும், அதுவே தங்களுக்கு சரியான தீர்வாக அமைந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

காதல் கசக்குதைய்யா
மீண்டும் காதல் வருமா என்ற கேள்விக்கு, "திரும்பவும் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை, தான் இப்போது மிகவும் உறுதியாக உள்ளேன். இந்த வாழ்க்கை முறை தனக்கு வசதியாக உள்ளது. இனிமேல் தான் இன்னும் வெளிப்படையாகவே இருப்பேன்" என தில்லாகவும் ரொம்பவே கூலாகவும் பதிலளித்துள்ளார். சமந்தாவின் இந்த கருத்துகள், பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.