twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    150 படங்களை இயக்கி சாதனைப் படைத்த ஐவி சசி!

    By Shankar
    |

    மறைந்த இயக்குநர் ஐவி சசி 1970 தொடங்கி 1990 வரை மலையாளத்தில் பல வெற்றிப் படங்களைத் தந்தவர். தமிழிலும் குறிப்பிடத்தக்க படங்களை இயக்கியுள்ள ஐவி சசி, சென்னையிலேயே வசித்து வந்தார்.

    ஒரு கலை இயக்குநராக திரைப்படத் துறையில் வாழ்க்கையைத் தொடங்கிய ஐவி சசி, 1975-ல் உத்சவம் படம் மூலம் இயக்குநரானார். மலையாளத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களைத் தந்தார்.

    IV Sasi, the director of more than 150 movies

    தமிழில் இவர் இயக்கிய முதல் படம் அலாவுதீனும் அற்புத விளக்கும். இதில் ரஜினிகாந்தும் கமல் ஹாஸனும் இணைந்து நடித்திருந்தனர். தமிழில் தொடர்ந்து பகலில் ஒரு இரவு படத்தை இயக்கினார்.

    அடுத்து ஒரே வானம் ஒரே பூமி படத்தை இயக்கினார். முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்ட படம் இது.

    கமல் ஹாஸனை வைத்து குரு படத்தையும், ரஜினியை வைத்து காளி, எல்லாம் உன் கை ராசி படங்களையும் அடுத்தடுத்து இயக்கினார்.

    ஐவி சசி இயக்கிய கடைசி தமிழ்ப் படம் கோலங்கள். 1995-ல் வெளியானது. இந்தியில் நான்கு படங்களை இயக்கிய ஐவி சசி, 2009 வரை படங்கள் இயக்கினார். அவரது கடைசி படம் வெள்ளதோவல்.

    IV Sasi, the director of more than 150 movies

    இந்தியாவில் 100-க்கு மேல் படங்களை இயக்கியவர்களில் இரண்டாவது இடம் ஐவி சசிக்குதான்.

    மம்முட்டியை வைத்து மட்டும் 35 படங்களை இயக்கியுள்ளார் ஐவி சசி. இனியெங்கிலும் படம் மூலம் மோகன் லாலுக்கு முதல் திருப்பு முனையைத் தந்தவரும் சசிதான்.

    ஆரோடம் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்றுள்ளார் ஐவி சசி.

    English summary
    IV Sasi is the second director who made more than 150 films in Indian film industry
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X