»   »  கோவாவில் 'இவளுக இம்சை தாங்க முடியல'!

கோவாவில் 'இவளுக இம்சை தாங்க முடியல'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேற ஒண்ணுமில்லை... ஒரு புதிய படத்தின் சினிமா தலைப்புதான் இது.

சமூக ஊடகங்கள் மூலம் பழகி காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னையிலிருந்து கோவா புறப்படுகிறான் நாயகன். அப்படிப் புறப்பட்டுப் போகிற பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் பரபரப்பும் நகைச்சுவையும் இழையோடச் சொல்கிற கதை இது.


இப்படத்தை ரூல் பிரேக்கர்ஸ் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் சக்திவேல், ஜெகன் நாராயணன் ஆகியோர் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.இவர்களில் சக்திவேல் 'கந்தகோட்டை' , 'ஈகோ' படங்களை இயக்கியவர், அவரிடம் பணிபுரிந்த வி.என். ராஜ சுப்ரமணியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


உதய் கார்த்திக்

உதய் கார்த்திக்

உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார் இவர் 'நான் சிவனாகிறேன்' படத்தில் நாயகனாக நடித்தவர். பாலாவின் இயக்கத்தில் 'பரதேசி' படத்தில் அதர்வாவுடன் நடித்தவர் நாயகியாக சஹானா நடித்துள்ளார். விஜய் டிவியின் 'கனாக்காணும் காலங்கள்' புகழ் சிவகாந்த் முழு நீள காமெடியனாக வருகிறார்.


கோவாவில்

கோவாவில்

முழுக்க முழுக்க கோவாவில் படமாகியுள்ளது. கோவா நகரம் அதன் தெருக்கள் , சாலைகள் என45 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. மற்ற எந்தப் படமும் காட்டாத கோவாவின் பல பகுதிகளில் சிரமப் பட்டுப் படப்பிடிப்பு நட்த்தியுள்ளனராம்.


வயசானவங்களே இல்லையாம்

வயசானவங்களே இல்லையாம்

இப்படம் முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் ஆதிக்கம் கொண்ட இப்படத்தில் வயதான பாத்திரங்கள் எதுவும் இடம் பெறவில்லையாம்.


ட்ராவல் காமெடி

ட்ராவல் காமெடி

இது ஒரு முழு நீள ட்ராவல் காமெடிப் படம்.


ஏ.வி. வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலேசியப் பாப் இசைக் கலைஞர் கேஷ் வில்லன்ஸ் இசையமைத்துள்ளார். எடிட்டிங் வெங்கட்ரமணன். இவர் 'மிருதன் 'படத்தின் எடிட்டர். நடனம் காதல் கந்தாஸ்.


படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. பாடல்களை விவேகா மற்றும் மணி வில்லன்ஸ் எழுதியுள்ளார்கள்.


தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கும் 'இவளுக இம்சை தாங்க முடியல ' படம், ஜூலை இறுதியில் வெளியாக இருக்கிறது.English summary
Ivaluga Imsai Thaanga Mudiyala is a new movie based on Travel comedy

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil