»   »  இவன் தந்திரன் தியேட்டர்லதான் பார்ப்பாங்க - கவுதம் கார்த்திக் நம்பிக்கை

இவன் தந்திரன் தியேட்டர்லதான் பார்ப்பாங்க - கவுதம் கார்த்திக் நம்பிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல தரமான திரைப்படங்களை மக்கள் தியேட்டதில் சென்றுதான் பார்த்து ரசிப்பார்கள். இவன் தந்திரன் திரைப்படமும் தரமான படம் என்று நடிகர் கவுதம் கார்த்திக் கூறியுள்ளார்.

கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ஷரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'இவன் தந்திரன்'. தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது. ஜூன் 30ல் படம் வெளியாக உள்ளது.

Ivan Thanthiran hero Gowtham karthik Pressmeet

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய கவுதம் கார்த்திக். பாகுபலி திரைப்படம் வெளியான போது அனைவரும் தியேட்டரில் சென்றுதான் பார்த்தனர். திருட்டு விசிடி வெளியானாலும் அதை நிராகரித்து விட்டனர்.

இவன் தந்திரன் படமும் தரமான படம். தரமான திரைப்படங்களை மக்கள் தியேட்டருக்கு சென்று ரசிக்கவே விரும்புவார்கள் என்றும் கூறினார் கவுதம் கார்த்திக்.

English summary
Actor Gowtham karthik talks about Ivan Thanthiran Movie. People likes and watching good quality movies in Theatre.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil