»   »  இவன் யாரென்று தெரிகிறதா: கண்டிஷன் போட்டு காதலியைத் தேடும் 'ஆபிஸ்' விஷ்ணு

இவன் யாரென்று தெரிகிறதா: கண்டிஷன் போட்டு காதலியைத் தேடும் 'ஆபிஸ்' விஷ்ணு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர் தினத்தில் பிறந்த நாயகனுக்கு காதலி கிடைக்காமல் படும் பாடுகள்தான் இவன் யாரென்று தெரிகிறதா படத்தின் கதைக்கரு.

சின்னத்திரையின் நாயகனாக வலம்வந்த ஆபிஸ் விஷ்ணு 'இவன் யாரென்று தெரிகிறதா' படத்தின் மூலம் ஹீரோவாக புரமோஷன் பெற்றிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வர்ஷா, இஷா நாயர் என 2 நாயகிகள் நடித்துள்ளனர்.

Ivan Yarendru Therikiratha Release Details

பாக்யராஜ், ஜெயபிரகாஷ், அர்ஜுன் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை எஸ்.டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வித்தியாசமான முறையில் வெளியிட்டிருக்கிறது.

''பியூட்டி பார்லருக்குப் போகாத, மொபைல் டாப் அப் பண்ணச் சொல்லாத, ஷாப்பிங் போக வேண்டும் என நச்சரிக்காத பெண்கள் உடனே அறிவழகனை (விஷ்ணு) அணுகலாம்.

மாதம் ஐம்பாதயிரத்திற்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்'' என்று நாயகன் விஷ்ணு கூறுவது போல இவன் யாரென்று தெரிகிறதா படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இன்று இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிடும் படக்குழு, படத்தை அடுத்த மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

English summary
Ivan Yarendru Therikiratha Movie Songs and Trailer will be Release Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil