பாவனி பற்றி பேசி ஐக்கியை அழவைத்த அண்ணாச்சி.. அபிநய் செய்த செயலால் அவுட்டான ஐக்கி!
சென்னை: கண்ணாடி டாஸ்க்கில் ஐக்கியின் கண்ணாடியாக மாறி அவரை போலவே விக் எல்லாம் வைத்துக் கொண்டு இமான் அண்ணாச்சி அலப்பறை செய்து வந்த நிலையில், அவரது பிம்பமாய் மாறி ஐக்கியின் மனக் குமுறல்களை அண்ணாச்சி எடுத்துரைத்தார்.
இமான் அண்ணாச்சி அன்புக்கு ஏங்கி தவிக்கும் ஐக்கி பெர்ரியை பற்றி பேச பேச அவர் கண்ணீர் சிந்த ஆரம்பித்து விட்டார்.
அண்ணாச்சியின் கையை விட்ட நிலையில், ஐக்கியின் ஒரு பேட்ஜ் பறிக்கப்பட்டு அண்ணாச்சிக்கு கொடுக்கப்பட்டது.

ஐக்கியின் கண்ணாடி
பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக கண்ணாடி டாஸ்க் ரண கொடூரமாக நடைபெற்று வருகிறது. ஏகப்பட்ட சண்டைகளுக்கு மத்தியில் ராஜு மற்றும் பிரியங்காவின் ஹேப்பி மொமன்ட்ஸ் ரசிகர்களை சிரிக்க வைப்பதை போல ஐக்கியின் கண்ணாடியாக மாறி அண்ணாச்சி செய்யும் சேட்டைகளும் ரசிக்க வைத்துள்ளன.

ஐக்கியை தாக்கி பேசல
வருண் போல தாக்கி பேசவோ தாமரை போல தெனாவட்டாக வெறுப்பேற்றி பாடவோ இல்லை இமான் அண்ணாச்சி. பழிவாங்கும் படலமாக இந்த டாஸ்க் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைத்த இமான் அண்ணாச்சி ஐக்கியின் நிஜ கண்ணாடியாக பிரதிபலித்து பேசினார்.

பிரியங்கா போல அக்கா
ஐக்கியின் மனக்குறைகளை எடுத்து பேசினார் அண்ணாச்சி. பிரியங்கா போல தனக்கு ஒரு அக்கா இல்லையே என ஐக்கி வருத்தப்படுகிறார் என்றும் இந்த வீட்டில் அன்புக்கு ஏங்கும் பெண்ணாக ஐக்கி பெர்ரி இருக்கிறார் என்றும் இமான் அண்ணாச்சி ஐக்கியின் உண்மையான உணர்ச்சிகளை தொட்டுப் பேச அவர் கலங்க தொடங்கி விட்டார்.

பாவனி அண்ட் கோ
பாவனி, சுருதி மற்றும் மதுமிதா கூட்டத்தில் ஒருவராக இணைந்து விட எவ்வளவோ முயற்சி செய்தும் ஐக்கியால் அவர்களுடன் ஒன்றாக இணைய முடியவில்லை என்கிற வருத்தம் இருக்கு என பேசியதும் ஐக்கியின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க ஆர்ம்பித்தது.

அபிநய் செய்த செயல்
அழுது கொண்டிருந்த ஐக்கிக்கு டாஸ்க்கின் போது டிஸ்யூ பேப்பரை எடுத்துக் கொடுத்து துடைக்க வைத்த அபிநய் செய்த வேலையால் அவர் அவுட்டானதாக பிக் பாஸ் அறிவித்து அவரது ஒரு பேட்ஜை கழட்டி இமான் அண்ணாச்சிக்கு கொடுக்க உத்தரவு போட்டார் பிக் பாஸ். மதுமிதா மற்றும் சுருதி வெளியேறிய நிலையில், பாவனியாவது ஐக்கி உடன் பேசுவாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











