»   »  விஜய் படத்தை வெளியிடாமல் தடுத்தது தமிழக அரசுதான்!- சொல்கிறார் ஜெ அன்பழகன்

விஜய் படத்தை வெளியிடாமல் தடுத்தது தமிழக அரசுதான்!- சொல்கிறார் ஜெ அன்பழகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தலைவா படத்தைத் தடுத்தது தமிழக அரசுதான் என்று தயாரிப்பாளர் ஜெ அன்பழகன் தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் தயாரான விஜய்யின் தலைவா படம் வெளியாகும் நேரத்தில் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்தது. இதற்குக் காரணம் யார் ? என்ற கேள்விக்கு நேரடியாக எந்த பதிலும் இல்லை. பின்னர் விஜய்யே முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இந்தப் பட பிரச்சினைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி, மாண்புமிகு அம்மா ஆட்சி சிறப்பாக இருப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டார்.

J Anbazhagan alleged Jayalalithaa govt

இந்த நிலையில், இந்தப் பிரச்சினை முடிந்து இத்தனை ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தைத் தடுத்ததே தமிழக அரசுதான் என்று தயாரிப்பாளரும் எம்எல்ஏவுமான ஜெ அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று கமலா திரையரங்கில் நடந்த கககபோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஜெ அன்பழகன் பேசுகையில், "இப்போது படங்களை வெளியிடுவதில் பிரச்சனை வருகிறது. சிறுபடங்கள் பெரிய படங்கள் என்ற பாராபட்சமே இதில் இல்லை.

முன்பு விஜய் நடித்த தலைவா திரைப்படத்தை வெளியிடக் கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது, அதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் போகவே, அதை கண்டு வருத்தமுற்ற நான் அதை வாங்கி வெளியிடுகிறேன் என்று அறிவித்தேன். இரவோடு இரவாக அய்யப்பன் 400 திரையங்குகளை புக் செய்தார். அதன் பின்னரே படம் வெளியானது.

இதுபோல நிறைய சின்ன படங்களை வாழ வைத்த ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது அவரது மகன் பாரதி அய்யப்பன் சார்பாக மீண்டும் துவங்கபட்டு சிறிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. அவரது தந்தைக்கு என் பூரண ஆசிகள் இருந்தது போன்று இவருக்கும் என் ஆசியும் எப்போதும் உண்டு," என்றார்.

English summary
J Anbazhagan MLA has alleged that ADMK govt only stopped Vijay movie Thalaiva few years back.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil