அடடா என்னாச்சு..? ஏலத்துக்கு வருகிறது பிரபல நடிகர் ஜாக்கி சானின் வீடு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

By

பெய்ஜிங்: பிரபல நடிகர் ஜாக்கி சானின் வீடு ஏலத்துக்கு வர இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

Jackie Chan prevention advice | கொரோனா Safety Measures

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் படங்களில் காமெடி மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் அதிக வரவேற்பை பெறும் என்பதால் இவர் நடிக்கும் படங்களில் அந்தக் காட்சிகள் அதிகம் இடம்பெற்று இருக்கும்.

ஸ்னேக் இன் த ஈகில்

ஸ்னேக் இன் த ஈகில்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்த ஜாக்கி சான், ஸ்டன்ட்மேனாகி பிறகு குங்ஃபூ படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1978 ஆம் ஆண்டு வெளியான ஸ்னேக் இன் த ஈகில் ஷேடோவ் என்ற படம் மூலம் அவர் கவனிக்கப்பட்டார். பிறகு அவர் சினிமா வாழ்க்கை உச்சத்துக்குச் சென்றது. இவர் கடைசியாக, கிளிம்பர்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

விஷ் டிராகன்

விஷ் டிராகன்

இது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து விஷ் டிராகன், வான்கார்ட், த ஹாண்ட்சம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. சில படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. கொரோனா நிலைமை சரியான பிறகு படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்க இருக்கிறது.

குடியிருப்பு வளாகம்

குடியிருப்பு வளாகம்

ஜாக்கிசான் ஹாங்காங்கில் வசித்து வந்தாலும் அவருக்கு சீனாவின் பெய்ஜிங்கிலும் வீடு இருக்கிறது. அங்கு டோங்ஜிமன் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தில், இரண்டு அபார்ட்மென்ட்களை கொண்ட வீட்டிலும் வசித்து வருகிறார். சுமார் 13 ஆயிரம் அடிகள் கொண்ட இதில் 6 படுக்கை அறைகள் உள்ளன.

எஸ்டேட்

எஸ்டேட்

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நடிகர் ஜாக்கிசான் தன் குடும்பத்துடன் இங்கு வசித்து வருகிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்பை, நடிகர் ஜாக்கி சான், யுஜியா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து வாங்கி இருக்கிறார். ஆனால், அந்த நிறுவனம் பத்திரத்தை முறையாக நடிகர் ஜாக்கி சானுக்கு மாற்றித் தரவில்லை என்று கூறப்படுகிறது.

பறிமுதல் உத்தரவு

பறிமுதல் உத்தரவு

இந்நிலையில், அந்த யுஜியா நிறுவனத்துக்கும் டென்ஹோங் என்ற மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும் பிரச்னை. இந்தப் பிரச்னை நீதிமன்றத்துக்குச் சென்றது. இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்த நீதிமன்றம், யுஜியா நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பதற்கு உத்தரவிட்டது.

குடியிருப்பு

குடியிருப்பு

இதையடுத்து யுஜியாவின் சொத்துக்களை கணக்கிட்டபோது, அதில் ஜாக்கிசான் வசிக்கும் குடியிருப்பும் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி, இந்த வீடு, வரும் 30 ஆம் தேதி ஏலத்தில் விடப்பட இருக்கிறது. இதன் சந்தை மதிப்பு, 14.9 மல்லியன் டாலர் ஆகும். ஏலத்தில், இதன் ஆரம்ப விலை 10.5 மில்லியன் டாலர். நடிகர் ஜாக்கிசான் வசிக்கும் வீடு ஏலத்துக்கு வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X