»   »  ஜாக்கி சான் நடிக்கும் தமிழ்ப் படம் குங்ஃபூ யோகா!

ஜாக்கி சான் நடிக்கும் தமிழ்ப் படம் குங்ஃபூ யோகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் தயாராகும் குங்ஃபூ யோகா படத்தில் நடிப்பதற்காக இந்தியா வருகிறார் ஜாக்கி சான்.

இந்திய - சீனா கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வருகிறது இந்தப் படம். இப்படத்தில் இந்திய-சீன நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

தமிழில் தனுஷுடன் ‘அனேகன்' படத்தில் நடித்த அமைரா தஸ்தூர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் வில்லனாக பல படங்களில் கலக்கிய சோனு சூட்டும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Jackie Chan to visit India for ‘Kung Fu Yoga’

சீன நடிகர்களான ஜாங் யிஜிங், மிங் ஹு உள்பட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஸ்டான்லி டோங் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்தது.

தற்போது இந்தியாவில் ஜெய்ப்பூரில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஜாக்கிசான் இன்று இந்தியா வருகிறார்.

15 நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்தியாவில் படப்பிடிப்பு முடிந்ததும், சீனாவிலும் சில காட்சிகள் படமாக உள்ளன.

English summary
Jackie Chan will be visiting India on March 21 to shoot for his upcoming Indo-Chinese film "Kung Fu Yoga".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil