»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் தயாரித்து வரும் "பாபா"வின் ஆடியோ உரிமை மட்டும் ரூ.4 கோடிக்குவிற்பனையாகியுள்ளது.

முந்தைய படமான "படையப்பா"வின் ஆடியோ உரிமையை விலைக்கு வாங்கி "சூப்பர் குட் பிலிம்ஸ்" அதிபரானஆர்.பி. செளத்ரி தான் "பாபா" ஆடியோ உரிமையையும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் "பாபா" படத்தை தன்னுடைய சொந்த செலவிலேயே ரஜினிகாந்த் ரிலீஸ் செய்யவுள்ளார்.இப்படத்தின் வினியோக உரிமை வேறு யாருக்கும் தரப்படவில்லை.

வரும் ஆகஸ்டு 15ம் தேதி ரிலீஸாகவுள்ள "பாபா" சென்னையில் மட்டும் ஆல்பர்ட், சத்யம், அபிராமி, உதயம்,பிருந்தா மற்றும் மகாராணி ஆகிய 6 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. பிற ஊர்களுக்கான தியேட்டர்களும்முடிவு செய்யப்பட்டு விட்டன.

ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் "பாபா"வை ரிலீஸ் செய்வதற்கான உரிமைகளையும்ரஜினிகாந்தே வைத்துள்ளார்.

இதற்கிடையே "பாபா"வின் 90 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து விட்டன. உச்சகட்ட கிளைமாக்ஸ்காட்சிக்காக பிரசாத் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள காளிகாம்பாள் கோவில் செட்டில் ரஜினிகாந்த் மஞ்சள்ஆடை உடுத்தி ஆடினார். இந்தப் பாடல் பெண்களைக் கவரும் விதத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விடும் என்று தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil