»   »  ஜாக்சன் துரை.. பயப்பட மாட்டீங்க.. 'கீகீகீ'ன்னு சிரிப்பீங்க.. உத்தரவாதம் தரும் டைரக்டர்!

ஜாக்சன் துரை.. பயப்பட மாட்டீங்க.. 'கீகீகீ'ன்னு சிரிப்பீங்க.. உத்தரவாதம் தரும் டைரக்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாக்சன் துரை.. நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படம். சத்யராஜும், அவரது மகன் சிபிராஜும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்திருக்கும் படமும் கூட.

பாகுபலி படத்திற்குப் பிறகு சத்யராஜ் மீதான எதிர்பார்ப்பு பெரிதாகி விட்டது. எனவே அவர் நடிக்கும் படம் என்றால் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்ற நிலை வந்து விட்டது.


இந்த நிலையில்தான் அவர் நடித்துள்ள ஜாக்சன் துரை பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இப்படத்தை இயக்கியிருப்பவர் தரணிதரன். படம் குறித்தும் அதில் சத்யராஜ், சிபிராஜ் குறித்தும் அவர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.


படப்பிடிப்பின் போது...

படப்பிடிப்பின் போது...

மேலும் இது தொடர்பாக தரணிதரன் கூறுகையில், "படப்பிடிப்பின்போது அவர்களைப் பார்த்தால் அப்பா, மகன் போலவே இல்லை. அப்படி நடந்து கொள்ளவே இல்லை. அவ்வளவு ஜாலியாக, நட்பாக இருவரும் பழகினர்.


நோ அட்வைஸ்...

நோ அட்வைஸ்...

இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து நடத்தியதுதான் என்னை ரொம்பக் கவர்ந்தது. அவரவர் வேலையை அவரவர் பார்த்தனர். யாரும் யாருடைய வேலையிலும் தலையிடவில்லை. அறிவுரை கூறவில்லை.


புது வடிவம்...

புது வடிவம்...

படத்தில் இவர்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக வந்துள்ளது. இது படத்திற்கும் புது வெயிட் கொடுத்துள்ளது. உண்மையில் இவர்களின் காம்பினேஷனால் படத்திற்கு புது வடிவமுபம் கிடைத்துள்ளது.


காமெடி பேய்...

காமெடி பேய்...

சிபிராஜ் ரோலைப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். அப்படி ஒரு கேரக்டர் அவருக்கு. காமெடி போலீஸாக அவர் வருகிறார். மறுபக்கம் சத்யராஜ் பேயாக வருகிறார். அவரும் சிரிப்பில் கலக்குவார்.


பேயாக மாறிய கட்டப்பா...

பேயாக மாறிய கட்டப்பா...

முதலில் பேய் வேடத்தில் நடிக்க அவர் மறுத்தார். பாகுபலி நடிச்சாச்சு. இனிமே போய் பேய்னா எப்படி என்று கேட்டார். நான்தான் அவரை உட்கார வைத்து விளக்கி, ஒரு சிறிய காட்சியையும் காட்டினேன். பிறகுதான் வழிக்கு வந்தார். உடனே சம்மதித்தார்" என்றார் தரணிதரன்.


நாளை ரிலீஸ்...

நாளை ரிலீஸ்...

இப்படத்தில் பிந்துமாதவி, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் ஆகியோரும் உள்ளனர். படம் நாளை திரைக்கு வருகிறது.


English summary
Father and son duo Sathyaraj and Sibiraj act together after ten years in the horror comedy Jackson Durai, directed by Dharanidharan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil