»   »  ‘டோரா’வாக மாறி தெலுங்கு பேசும் ஜாக்சன் துரை!

‘டோரா’வாக மாறி தெலுங்கு பேசும் ஜாக்சன் துரை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீண்ட இடைவேளைக்குப் பிறகு சத்யராஜ் - சிபிராஜ் இணைந்து மிரட்டியுள்ள ஜாக்சன் துரை பேய்ப்படம், தெலுங்கில் டோரா என்ற பெயரில் ரிலீசாகிறது.

ஜோர், வெற்றிவேல்-சக்திவேல், மண்ணின் மைந்தன், கோவை பிரதர்ஸ் படங்களைத் தொடர்ந்து சத்யராஜ்-சிபிராஜ் இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் ஜாக்சன் துரை. இத்திரைப்படம் வருகின்ற 17ம் தேதி ரிலீசாகிறது.


‘பர்மா' புகழ் தரணிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார். சிபிராஜ் ஜோடியாக இப்படத்தில் பிந்துமாதவி நடித்துள்ளார்.


அமானுஷ்ய சம்பவங்கள்...

அமானுஷ்ய சம்பவங்கள்...

1940களில் நடப்பது போன்ற இந்தக் கதையில் நடிகர் சிபிராஜ் போலீசாகவும், சத்யராஜ் பேயாகவும் நடித்திருக்கின்றனர். போலீஸ் அதிகாரியான சிபிராஜை ஒரு கிராமத்தின் பிரச்சினையைத் தீர்க்க அனுப்பி வைக்கின்றனர். அங்கே சில அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெற அதிலிருந்து சிபிராஜ் அந்தக் கிராமத்தை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
சத்யராஜ்...

சத்யராஜ்...

கொடூரமான வில்லன் வேடங்களில் நடித்திருந்தபோதும், முதன்முறையாக சத்யராஜ் பேய் வேடமேற்று நடித்திருக்கும் படம் ஜாக்சன் துரை தான். இவர்களுடன் இணைந்து பிந்து மாதவி, "நான் கடவுள்" ராஜேந்திரன் மற்றும் கருணாகரன் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
டோரா...

டோரா...

ஏற்கனவே தமிழ் சினிமாவைப் பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. அதில் புதிய வரவாக இந்த ஜாக்சன் துரை இணைந்துள்ளது. இப்படம் தெலுங்கில் டோரா என்ற பெயரில் ரிலீசாகிறது.


கட்டப்பா...

கட்டப்பா...

ஏற்கனவே, பாகுபலி கட்டப்பா கதாபாத்திரம் மூலம் தெலுங்கிலும் தனக்கென ரசிகர்களைப் பெற்றுள்ளார் சத்யராஜ். அதுமட்டுமின்றி இப்படத்தின் நாயகியான பிந்து மாதவி தெலுங்கு தேசம் தான். எனவே, டோராவிற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Tamil actor Sathyaraj has become familiar to Telugu viewers with his roles as father.Now his latest yet to be released Tamil movie ‘Jackson Durai’ is getting dubbed in to Telugu with the title ‘Dora’.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil